சாம்சங் போன்களில் பெருகும் Auto Restart சிக்கல்.. பாதிக்கப்பட்ட போன் பட்டியலில் உங்க போன் இருக்கா?

|

சாம்சங் கேலக்ஸி ஏ மற்றும் கேலக்ஸி எம் சீரிஸின் சில பயனர்கள் ஒரு மர்மமான பிரச்சனை பற்றி புகார் செய்துள்ளனர். இது அவர்களின் தொலைப்பேசிகளை ஹேங் செய்ய வைப்பதுடன், பயனர்களின் அனுமதியின்றி பயன்பாட்டில் இருக்கும் போதே ரீஸ்டார்ட் செய்யப்படுவதாகப் பயனர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இந்த புதிய பிரச்சனை சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலில் எந்த வகை மாடல்களில் எல்லாம் காணப்படுகிறது என்று இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி மாடல்களில் பாதிக்கப்பட்ட சாதனங்களின் பட்டியல்

சாம்சங் கேலக்ஸி மாடல்களில் பாதிக்கப்பட்ட சாதனங்களின் பட்டியல்

சாம்சங் வெளியிட்டுள்ள மொபைல் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சாதனங்களின் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எம் 30 எஸ், சாம்சங் கேலக்ஸி எம் 31, சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ 50, சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஆகியவை அடங்கும். சாம்சங் கேலக்ஸி எம் தொடர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களாகும். அதேபோல், சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மிட் ரேஞ் செக்மென்ட் விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும்.

பாதிக்கப்பட்ட சாதனங்களின் ரீஸ்டார்ட் சிக்கல்

பாதிக்கப்பட்ட சாதனங்களின் ரீஸ்டார்ட் சிக்கல்

நினைவுகூர, சாம்சங் கேலக்ஸி ஏ 51 சாதனம் 2020 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிரட்டலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களைப் பயன்படுத்துபவர்களின் சாதனம் தானாக உறைகிறது அல்லது தானாகவே ரீஸ்டார்ட் செய்யப்படுகிறது என்றால், இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள். சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட சாதனங்களின் ரீஸ்டார்ட் சிக்கல் பெரிய துயரமாகப் பார்க்கப்படுகிறது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

பேக்டரி ரீசெட் அம்சத்தை பயன்படுத்தினால் இதில் இருந்து தப்பிக்க முடியுமா?

பேக்டரி ரீசெட் அம்சத்தை பயன்படுத்தினால் இதில் இருந்து தப்பிக்க முடியுமா?

பயனர்கள் தற்போது அனுபவிக்கும் இந்த இரண்டு சிக்கல்களுக்கும் பின்னணியில் உள்ள சரியான பிரச்சனை மற்றும் அதற்கான சரியான காரணம் என்னவென்று இன்னும் சாம்சங் நிறுவனத்திற்குச் சரியாகத் தெரியவில்லை. சில பயனர்கள் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க அவர்களின் சாதனத்தில் இருக்கும் பேக்டரி ரீசெட் அம்சத்தைப் பயன்படுத்திய போதும் இந்த சிக்கல் சரியாகவில்லை என்று சாம்சங் ஃபோரம் பக்கத்தில் சாம்சங் பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மதர்போர்டில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளதா?

மதர்போர்டில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளதா?

சாம்சங் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த சிக்கலை உறுதிப்படுத்தவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், பாதிக்கப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் செயலியில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. "கடந்த 3 நாட்களில் நான் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஆரம்பித்தேன், நான் வாடிக்கையாளர் சேவையைப் பார்வையிட்டபோது அவர்கள் மதர்போர்டில் தவறு இருப்பதாகக் கூறினர்" என்று பாதிக்கப்பட்ட பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?

சிக்கலை சரி செய்ய 100 டாலர் செலவா?

சிக்கலை சரி செய்ய 100 டாலர் செலவா?

இந்த சிக்கலை சரி செய்ய மதர்போர்டை மாற்ற வேண்டும் என்று சாம்சங் சேவை மைய அதிகாரி கூறியதாகப் பயனர்களில் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர். ஆனால், இது பயனர்களுக்கு $ 100 டாலருக்கும் அதிகமாகச் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம் தொடர் வரம்பை விரிவாக்க உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும்.

செப்டம்பர் 28ல் அறிமுகமாகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இது தானா?

செப்டம்பர் 28ல் அறிமுகமாகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இது தானா?

இது செப்டம்பர் 28 மதியம் 12 மணிக்கு நிறுவனத்தால் வெளியிடப்படும். இந்த சாதனம் 7.4 மிமீ நேர்த்தியான வடிவமைப்பில் வரும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது மற்றும் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் வரவிருக்கும் தொலைப்பேசியின் மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது. அமேசான் மேடையில் இதன் விற்பனை கிடைக்கும் என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M and A Series Phone Users Are Facing Auto Restart Issue : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X