ரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.!
கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சீரிஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதன் பல ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2
மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது,மேலும் இக்கருவி தங்கம், கருப்பு, போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2:
கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே
கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழ எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின் 1080x1920பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எக்ஸிநோஸ்:
கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சீரிஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13ம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி
பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications