நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் .!
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அட்டகாசமான விலைகுறைப்பை அறிவித்துள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பு ஆஃபரை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வோடபோன் நிறுவனம் ரூ.1500-வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்.
கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது, அதன்பின்பு சாம்சங் ஷாப், இ-காமர்ஸ், பிளிப்கார்ட் போன்ற வலைதளம் மூலம் இந்த விலைகுறைக்கப்பட்ட கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

விலைகுறைப்பு:
கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ( 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு) கொண்ட ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ( 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு) கொண்ட ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்ட்ராய்டு:
கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications