வெடித்ததோ சாம்சங் ஸ்மார்ட்போன்; புகாரில் சிக்கியதோ ஜெட் ஏர்வேஸ்.! பின்னணி என்ன.?

Written By:

பல வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து அற்புதமான மற்றும் மிகவும் பாதுகாப்பான கருவிகளை வெளியிட வேண்டிய கட்டாயம் மற்றும் கடுமையான விமர்சனங்களை நிறுவனம் எதிர்கொண்டது, சமீபத்திய கேலக்ஸி எஸ்8 வரையிலான அதனை செய்தும் காட்டியது.

இழந்த சந்தையை மீட்டு தன் பிராண்ட் பெயரை காப்பாறிக்கொண்ட சாம்சங் நிறுவனத்திற்கு, மறுபடியும் ஒரு சோதனை வந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மர்மமான முறையில் வெடிப்பு.!

மர்மமான முறையில் வெடிப்பு.!

ஆம் சாம்சங் கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட்போன் ஒன்று மர்மமான முறையில் விமான பயணத்தின் போது வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை புது டெல்லியிலிருந்து இண்டோருக்கு பயணிக்கும் ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மர்மமான முறையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

விமான பயணங்களுக்கு தடை.!

விமான பயணங்களுக்கு தடை.!

வெடிப்பு சம்பவங்களில் சிக்குவதால், நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விமான பயணங்களுக்கு தடை செய்யப்பட்ட ஒரு கருவியாய் உள்ளாக்கப்பட்டது. தற்போது சாம்சங் கவலைகொள்ள சாம்சங் கேலக்ஸி ஜே7என்ற பெயரில் ஒரு புதிய காரணம் கிடைத்துள்ளது.

தண்ணீரில் மூழ்கடிதத்தின் மூலமாக.!

தண்ணீரில் மூழ்கடிதத்தின் மூலமாக.!

வெடிப்புக்கு உள்ளான கருவியை தண்ணீரில் மூழ்கடிதத்தின் மூலமாக உண்டான தீயை அணைக்க முடிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 120 பயணிகளில் ஒருவருக்கு கூட காயம் இல்லை எந்த பாதிப்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயணம் தொடங்கிய 15 நிமிடங்களில்.!

பயணம் தொடங்கிய 15 நிமிடங்களில்.!

வெடிப்பிற்கு உள்ளான கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட்போன் ஆனது தில்லி குடியிருப்பாளரான ஆர்பிட்டா தால் என்பவருக்கு சொந்தமானதாகும். அவர் மொத்தம் மூன்று கைபேசிகளுடன் பயணித்துளார். பயணம் தொடங்கிய 15 நிமிடங்களில் தனது பையில் இருந்து புகை வெளிவருவதை கண்டறிந்த ஆர்பிட்டா தால், உதவிக்காக குழுவினர் அழைத்துள்ளார். நெருப்பை அணைக்கும் கருவியினால் தீயை அணைக்க முடியாத நிலை உருவாக, பின்னர் அது நீரின் உதவுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸுக்கு எதிராக புகார்.!

ஜெட் ஏர்வேஸுக்கு எதிராக புகார்.!

வீடு திரும்பிய ஆர்பிட்டா தால், ஜெட் ஏர்வேஸுக்கு எதிராக புகார் ஒன்றை செய்துள்ளார். இந்த சம்பவம் விமான பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒரு கேள்வியாகும், ஒரு பெரிய நெருப்பு அல்லது குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் நிகழ்ந்து, நெருப்பை அணைக்கும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்றால் என்னவாகியிருக்கும்.?என்ற கேள்வியை ஆர்பிட்டா தால் முன்வைத்துள்ளார்.

அதே சிக்கலை எதிர்கொள்கிறதா.?

அதே சிக்கலை எதிர்கொள்கிறதா.?

நடுவானில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதற்கு பின்னால் உள்ள சரியான காரணமும் இன்னும் தெரியவில்லை. கேலக்ஸி ஜே7 ஆனது கேலக்ஸி நோட் சந்தித்த அதே சிக்கலை எதிர்கொள்கிறதா என்பதை சாம்சங் நிறுவனம்தான் கூறவேண்டும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy J7 catches fire on Jet Airways flight, company is looking into the matter. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot