மாபெரும் விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி J2 மாடல்: புதிய விலை என்ன தெரியுமா?

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருக்கும் சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சாம்சங் கேலக்ஸி J2 என்ற புதிய மாடலை ரூ.9890 என்ற விலையில் அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த மாடல் தற்போது ரூ.800 குறைக்கப்பட்டு ரூ.9090 என்ற விலையாக உள்ளது.

மாபெரும் விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி J2 மாடல்: புதிய விலை என்ன தெர

மேலும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது ஸ்னாப்டீல் இணையதளத்தில் மட்டுமே கிடைத்த சாம்சங் கேலக்ஸி J2 மாடல் தற்போது விலை குறைக்கப்பட்ட பின்னர் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் இணையதளத்திலும் கிடைக்கின்றது. கோல்டு, சில்வர், மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி J2 மாடல் போனை பெற்று கொள்ளலாம்

சாம்சங் கேலக்ஸி J2 மாடல் ஸ்மார்ட்போன் 5 இன்ச் HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் இந்த போனில் 1.5GHz குவாட்கோர் பிராஸசரும், 2GB ரேம் மற்றும் 16 GB இன்னர் ஸ்டோரேஜையும் கொண்டது. மேலும் இந்த போனின் மெமரியை 128 GB வரை எஸ்டி கார்டு போட்டு விரிவாக்கிக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 6.0 ஓஎஸ் வகையை கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி J2 மாடல் ஸ்மார்ட்போனில் 8MP அளவில் மெயின் கேமிராவும், 5MP அளவில் செல்பி கேமிராவும் உள்ளது.

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி J2 ஸ்மார்ட்ப்போனில் 4G LTE, புளூடூத் 4.1, வைபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி 2.0 போர்ட், டூயல் சிம், மற்றும் 2600mAh தரம் கொண்ட பேட்டரியும் உள்ளது.

மேலும் இந்த போனில் TST என்று கூறப்படும் டர்போ ஸ்பீட் டெக்னாலஜி உள்ளதால் மற்ற ஸ்மார்ட்போன்களை விட 40% அதிக வேகத்தில் செயல்படும் என்பதால் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இந்த ஸ்மார்ட்போன் கருதப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy J2 Pro has now received a minor price cut of Rs. 800 and is now available at Rs. 9,090.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X