கேலிகளுக்கு மத்தியில் கெத்து காட்டுமா கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் +.!?

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் பிளஸ் ஸ்மார்ட்போன் கருவியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சங்கள்.

|

நம்பகமான பல நுகர்வோர்களை இழந்துவிட்ட நிலையில் நிற்கும் கொரிய நிறுவனமான சாம்சங், அதன் புதிய வெளியீடான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் + உடன் அதன் சந்தை நிலையினைப் மீண்டும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் + கருவியானது சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது அத்துடன் அது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் கருவியின் விலைக்கு நிகரானதாகவே இருக்கும் (ரூ.10,000/-) என்றும் நம்பப்படுகிறது. எனினும், இந்தியாவில் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வெடிக்கும் தொலைபேசி என்று கிண்டலடிக்கபப்டும் கேலக்சி ஸ்மார்ட்போன்களால் சமீப காலமாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் 'கம் பேக்' ஆக சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் ப்ளஸ் கருவி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூன்று வண்ணங்களில்

மூன்று வண்ணங்களில்

கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன சாம்சங் நிறுவனத்தின் புதிய கருவி கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் + ஒரு நடுத்தர அளவிலான ஸ்மார்ட்போன் என்பதால் அது கருப்பு, வெள்ளை மற்றும் பிங்க் உள்ளிட்ட மூன்று கம்பீரமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த சாமர்ட்போனின் தோற்றம் ஒரு சாதாரண கேலக்ஸி மாதிரியில் தான் இருக்கும் என்றும் கருதப்படுகிறது, பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

முந்தைய மடல்கள் போலின்றி இம்முறை கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் எந்தவிதமான ஸ்க்ரீன் பாதுகாப்பு அம்சமும் இன்றி இக்கருவி வெளியாகிறது. பேக் கவரில் மட்டுமே நிறுவனம் மாற்றங்கள் மாதங்கள் நிகழ்த்தியுள்ளது. மீடியாடெக் எம்டி6737டி க்வாட்-கோர் ப்ராஸசர் கொண்டுள்ள இக்கருவியானது 1.5ஜிபி அளவிலான ரேம் கொண்டுள்ளது உடன் 5 இன்ச் ஐபிஎஸ் (540x960 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மாறுபட்ட சேமிப்பு திறன்களில்

மாறுபட்ட சேமிப்பு திறன்களில்

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 8ஜிபி, 16ஜிபி மற்றும் 32 ஜிபி என பல்வேறு சேமிப்பு வகைகளில் கிடைக்கும் மேலும் 256ஜிபி வரை ஒரு மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக மெமரியை நீட்டித்துக் கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிரா, பேட்டரி

கேமிரா, பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் + கருவியானது எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 8 எம்பி பின்புற கேமரா உடன் செல்ஃபிகளுக்காக 5 எம்பிமுன்பக்க கேமிரா கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டுள்ள இக்கருவியானது ஒரு 2600எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

ஜியோ சிம் ஆதரவு

ஜியோ சிம் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் சிம் ஆதரவுக்கு இணக்கமான 4ஜி, எல்டிஇ உட்பட இணைப்பு வசதிக்கு ஆதரவு அளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங்: எல்லாமே வெடித்தால் என்ன செய்றது, பயனர் புலம்பல்!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Grand Prime+: 5 Key Features of the Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X