Home
News

அடேங்கப்பா! சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 இன் விலை இவ்வளவா?

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது அதிநவீன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 ஆகியவற்றை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது மற்றும் வாரங்களுக்குள் நிறுவனம் அவற்றை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் இசட் ஃபிளிப் 3 ஆகியவற்றின் விலை நிர்ணயம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்தியாவில் கிடைக்கும் சலுகையில் விபரங்களையும் பார்க்கலாம்.

சாம்சங் இந்தியாவில் மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது

சாம்சங் இந்தியாவில் மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது

முதல் முறையாக சாம்சங் இந்தியாவில் மடிக்கக்கூடிய தொலைப்பேசியை ரூ. 1 லட்சத்திற்குள் அறிமுகப்படுத்துகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 5 ஜி ரூ. 84,999 இல் தொடங்குகிறது. பழைய கேலக்ஸி இசட் ஃபிளிப் 2020 இல் ரூ. 1,05,000 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, இந்த சாதனம் வெறும் ரூ. 63,820 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃப்ளிப் 3 5 ஜி ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் மற்றும் வரையறுக்கப்பட்ட வண்ண விருப்பங்களிலும் இந்தியாவில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் புதிய வேரியண்ட் மாடல்கள் என்ன விலையில் கிடைக்கிறது என்று தெளிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5G ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ. 1,49,999 ஆக இருக்கிறது. இது பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி விலை மற்றும் வண்ண விபரம்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி விலை மற்றும் வண்ண விபரம்

  • சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ. 1,57,999 ஆக இருக்கிறது. இது பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
  • சாம்சங் கேலக்ஸி ஃபிளிப் 3 5 ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ. 84,999 ஆக இருக்கிறது. இது பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் கிரீம் நிறங்களில் கிடைக்கிறது
  • சாம்சங் கேலக்ஸி ஃப்ளிப் 3 5 ஜி 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ. 88,999 ஆக இருக்கிறது. இது பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் கிரீம்நிறங்களில் கிடைக்கிறது.
  • சலுகைகள் மற்றும் கிடைக்கும் தன்மை விபரம்

    சலுகைகள் மற்றும் கிடைக்கும் தன்மை விபரம்

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃப்ளிப் 3 5 ஜி அறிமுக சலுகைகள் மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 5 ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 5 ஜி போன்களை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ .7000 வரை மேம்படுத்தப்பட்ட வவுச்சர் கிடைக்கும். அல்லது, ரூ. 7000 வரை எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு கேஷ் பேக் பெறத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ .7999 மதிப்புள்ள இலவச நன்மை

    ரூ .7999 மதிப்புள்ள இலவச நன்மை

    இது தவிர, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5 ஜி-யை முன்பதிவு செய்வதில் ரூ .7999 மதிப்புள்ள 1 வருட சாம்சங் கேர்+ விபத்து & திரவ சேதம் பாதுகாப்பு மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 5 ஜி-யை முன்பதிவு செய்வதில் ரூ. 4799 மதிப்புள்ள நன்மைகள் இலவசமாகக் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் முன்பே முன்பதிவு செய்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5 ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 5 ஜி இலவச கேலக்ஸி ஸ்மார்ட் டேக் உடன் அனைத்து முன்பதிவு சலுகைகளுக்கும் தகுதியுடையவர்கள்.

    விற்பனை எப்போது?

    விற்பனை எப்போது?

    ஆகஸ்ட் 24 மற்றும் செப்டம்பர் 09, 2021 க்குள் சாம்சங்.காம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5 ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 5 ஜி ஆகியவற்றை முன்பதிவு செய்யலாம். விற்பனை செப்டம்பர் 10, 2021 முதல் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள உடனே எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Fold 3 5G and Galaxy Flip 3 5G launch offers and availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X