Home
News

ரூ.999 செலுத்தினால் Samsung Galaxy F54 5G போனை கன்ஃபார்மா வாங்கலாமா? எப்படி தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மிட் ரேஞ் 5ஜி ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி சாதனத்தை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஜூன் 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

Samsung Galaxy F54 5G போனை இந்திய வாடிக்கையாளர்கள் ரூ.999 என்ற விலையில் முன்பதிவு செய்யலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி போனை முன்பதிவு செய்பவர்கள் ரூ. 2,000 மதிப்புள்ள பிரத்தியேக முன்கூட்டிய ஆர்டர் சலுகைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வெறும் ரூ.999 விலையில் இந்த போனை முன்கூட்டிய ஆர்டர் செய்ய வாய்ப்பையும் உறுதி செய்கிறது.

ரூ.999 செலுத்தினால் Samsung Galaxy F54 5G போனை கன்ஃபார்மா வாங்கலாமா?

ரூ.999 வைப்புத் தொகையாக வைக்கப்படும், இறுதி விலையில் இருந்து தானாகவே போனின் விலையில் இருந்து கழிக்கப்படும். சாம்சங் நைட்கிராஃபி, நோ ஷேக் கேமரா, அஸ்ட்ரோலாப்ஸ் மற்றும் லோ லைட் செல்ஃபி போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy M54 5G ஐப் போலவே இந்த போன் தெரிகிறது.

Samsung Galaxy F54 5G ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்ச விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.7' இன்ச் FHD+ கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடைய Super AMOLED பிளஸ் இன்பினிட்டி-O டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் ஆக்டா கோர் 2.4GHz Quad A78 + 2GHz Quad A55 CPUகள் உடன் கூடிய Exynos 1380 சிப்செட் உடன் இயங்குகிறது.

இது Mali-G68 MP5 ஜிபியுடன் 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் வருகிறது. Samsung One UI 5.1 உடன் Android 13 தளத்தில் இயங்குகிறது. இந்த போனில் 108MP பின்புற கேமரா, OIS கொண்ட 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது.

ரூ.999 செலுத்தினால் Samsung Galaxy F54 5G போனை கன்ஃபார்மா வாங்கலாமா?

இது LED ஃபிளாஷ் உடன் 32MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. இந்த போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது 5G SA / NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.3, GPS + GLONASS, USB டைப்-சி, 6000mAh பேட்டரி 25W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், Samsung Galaxy F54 5G இன் 8GB + 256GB விலை ரூ. 35,999 ஆகும். எனவே இதன் 6GB + 128GB விலை ரூ.30000-க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F54 5G Pre-booking Starts From June 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X