செப்டம்பர் 29: 64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.குறிப்பாக இந்த கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி எஃப்42 ஸமார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வடிவடிமைப்புடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன். அதேபோல் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங்
நிறுவனம் சமீபத்தில அறிமுகம் செய்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஒன்யூஐ 3.1 கஸ்டம் ஸ்கின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரவில்லை, அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களை இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications