Home
News

சிறப்பு சலுகை விலையில் Samsung Galaxy F42 5G வாங்க இதை செய்யுங்கள்.. குறுகிய காலத்திற்கு மட்டுமே..

சாம்சங் கேலக்ஸி F42 5G புதன்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சாம்சங் போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இந்த புதிய சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட டிஸ்பிளே உடன் இந்தியாவில் 5 ஜி இணைப்போடு வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்-சீரிஸில் 5ஜி உடன் வெளிவரும் முதல் போன் இதுவாகும். இந்த சாதனம் 12 தனித்துவமான பேண்ட்களை ஆதரவு செய்கிறது. சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரத்துடன், குறுகிய காலத்திற்குக் கிடைக்கும் சலுகை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன் எந்த சாதனத்துடன் இந்தியாவில் போட்டியிடும்?

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன் எந்த சாதனத்துடன் இந்தியாவில் போட்டியிடும்?

புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன் சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G இன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் iQoo Z3, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் மற்றும் ரியல்மி X7 5G போன்ற மற்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக ஸ்மார்ட்போன் மாடல்களுடன் எதிராகப் போட்டியிடும் போல் தெரிகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் அறிமுகம் விலை மற்றும் சலுகை விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F42 5G விலை மற்றும் அறிமுக சலுகையின் விபரங்கள்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F42 5G விலை மற்றும் அறிமுக சலுகையின் விபரங்கள்

புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடலான 6 ஜிபி ரேம் மாறுபாட்டிற்கு இந்தியாவில் ரூ. 20,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 22,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விருப்பங்களும் தரமான மேட் அக்வா மற்றும் மேட் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன் எப்போது & எங்கு வாங்க கிடைக்கும்?

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன் எப்போது & எங்கு வாங்க கிடைக்கும்?

புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் இரண்டு வெவ்வேறு ரேம் வேரியண்ட்களும் 128 ஜிபி கொண்ட உள் சேமிப்பை ஆதரிக்கிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதன் முதல் விற்பனையை பிளிப்கார்ட், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் நிலையங்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறப்பு அறிமுக விலை மற்றும் செல்லுபடி காலம் எவ்வளவு?

சிறப்பு அறிமுக விலை மற்றும் செல்லுபடி காலம் எவ்வளவு?

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டு சலுகையாக, குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டும் நிறுவனம் சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, சிறப்பு சலுகை விலையாக புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வேரியண்ட் மாடலை நீங்கள் வெறும் ரூ. 17,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி மாடலை வெறும் ரூ. 19,999 என்ற விலையிலும் வாங்க முடியும். கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகளும் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சிறப்பு அறிமுக விலை செல்லுபடியாகும்.

சாம்சங் கேலக்ஸி F42 5G சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி F42 5G சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உடன் வழங்குகிறது. இந்த போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் 8 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு 11 இல் செயல்படும் ஒன் யுஐ 3.1 உடன் இயங்குகிறது. இது 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.

ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு விருப்பம்

ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு விருப்பம்

பின்புற கேமரா அமைப்பு ஹைப்பர்லாப்ஸ், ஸ்லோ மோஷன், ஃபுட் மோட், நைட் மோட், பனோரமா மற்றும் ப்ரோ மோட் உள்ளிட்ட பல்வேறு முறைகளையும் ஆதரிக்கிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, சாம்சங் கேலக்ஸி F42 5G போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி F42 5G சாதனம் 128ஜிபி கொண்ட உள் சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

5,000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங்

5,000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங்

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. கூடுதலாக, வயர்டு மற்றும் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களில் அதிவேக ஒலி அனுபவத்தை வழங்க டால்பி அட்மோஸ் ஆதரவையும் இந்த ஸ்மார்ட்போன் உள்ளடக்கி உள்ளது. இந்த சாதனம் 15W சார்ஜரைப் பயன்படுத்தும் போது வேகமான சார்ஜிங் அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த சாம்சங் சாதனம் 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F42 5G Will Go With Special Introductory Price During Flipkart Big Billion Days Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X