Home
News

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி போனின் விலை இது தான்.. வாங்குவதற்கு ரெடியா மக்களே.!

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் தொடரில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சேர்க்கத் தயாராக உள்ளது. அதிகம் பேசப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி இப்போது இந்தியாவில் அறிமுகமாவது பற்றிப் பேசப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இதன் விலை மற்றும் முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன்

இப்போது, ​​சாதனத்திற்கான ஒரு பிரத்தியேக இணையதளம் அதிகாரப்பூர்வ சாம்சங் வலைத்தளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. இந்த பட்டியல்கள் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி விலை, விற்பனை தேதி மற்றும் சில முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி விலை என்ன?

சமீபத்திய தகவல் படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி இரண்டு சேமிப்பு விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட அடிப்படை வேரியன்ட் விலை 20,999 ரூபாயாகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட ஹை-எண்ட் வேரியன்ட்டின் விலை 22,999 ரூபாயாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இவை சாம்சங் கேலக்ஸி F42 5G இன் ஆஃப்லைன் விலைகள். இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம், ஏனெனில் சாதனம் Flipkart மற்றும் Samsung.com வழியாக விற்பனைக்கு வரும்.

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட்போன் செல்பி கேமராவுக்கான இடத்தை வழங்குவதற்காக டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் மூலம் அறிமுகம் செய்யப்படும் என்பதை இது காட்டுகிறது. இது ஒரு சதுர வடிவ கேமரா வடிவமைப்புடன் இந்த சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சாருடன் வருவது தெரிகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை பற்றிப் பேசுகையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் போர்ட்டலான பிளிப்கார்ட்டுக்கு பிரத்தியேகமாக வரும் என்பது பட்டியலிடப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சிறப்பம்சம்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சிறப்பம்சம்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய FHD பிளஸ் டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவு இன்னும் டீஸர்களால் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முந்தைய கசிவுகள் படி, இதன் அளவு சுமார் 6.6' இன்ச் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் அம்சம்

ஸ்டோரேஜ் அம்சம்

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட சாதனமாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காகப் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும் One UI இயங்குதளத்துடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. அதேபோல், இது ஒரு 5ஜி சாதனம் என்பதனால் இது சுமார் 12 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவை வழங்குகிறது. இது பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி சென்சார், 5 எம்பி இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை டெப்த் சென்சாருக்கு ஆதரவளிக்கிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆயுள் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு பற்றி எந்த தகவலையும் அந்த பதிவு இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F42 5G Price Leaked Before Launch On September 29 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X