இனி காத்திருக்க வேண்டாம்.. சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி போனை கையில் வாங்கும் நேரம் வந்தாச்சு..

|

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் தொடரில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சேர்க்க தயாராக உள்ளது. அதிகம் பேசப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி இப்போது இந்தியாவில் அறிமுகமாவது பற்றிப் பேசப்படுகிறது. இப்போது, ​​சாதனத்திற்கான ஒரு பிரத்தியேக இணையதளம் அதிகாரப்பூர்வ சாம்சங் வலைத்தளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. இந்த பட்டியல்கள் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி விலை, விற்பனை தேதி மற்றும் சில முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் முதலில் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்துவதோடு, மைக்ரோசைட் சாம்சங்கின் ஸ்டேபிளில் இருந்து வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களையும் உறுதிப்படுத்துகிறது. செல்பி கேமராவுக்கான இடத்தை வழங்குவதற்காக டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் மூலம் அறிமுகம் செய்யப்படும் என்பதை இது காட்டுகிறது.

சதுர வடிவ கேமரா வடிவமைப்பு

சதுர வடிவ கேமரா வடிவமைப்பு

மேலும், ஒரு சதுர வடிவ கேமரா வடிவமைப்புடன் இந்த சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சாருடன் வருவது தெரிகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை பற்றிப் பேசுகையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் போர்ட்டலான பிளிப்கார்ட்டுக்கு பிரத்தியேகமாக வரும் என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் இந்தியாவில் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று தொடங்கப்படும் என்பதால், அக்டோபர் தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய FHD பிளஸ் டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவு இன்னும் டீஸர்களால் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முந்தைய கசிவுகள் படி, இதன் அளவு சுமார் 6.6' இன்ச் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பம்

மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பம்

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட சாதனமாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காகப் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

 12 வகையான 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவா?

12 வகையான 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவா?

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. அதேபோல், இது ஒரு 5ஜி சாதனம் என்பதனால் இது சுமார் 12 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவை வழங்குகிறது. இது பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி சென்சார், 5 எம்பி இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை டெப்த் சென்சாருக்கு ஆதரவளிக்கிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆயுள் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு பற்றி எந்த தகவலையும் அந்த பதிவு இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

என்ன விலையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்?

மேலும், இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும் One UI இயங்குதளத்துடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி அறிமுகம் நெருங்கி வருவதால் வரும் நாட்களில் இன்னும் கூடுதல் தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம். இந்த சாதனத்தின் அறிமுக விலை என்னவாக இருக்கும் என்பதை நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை, இருப்பினும் முந்தைய கசிவுகள் படி, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ரூ. 20,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படலம் என்பதைத் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F42 5G India Launch Is Set For September 29 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X