அப்படி போடு.. 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய சாம்சங்.. எந்த மாடலுக்கு தெரியுமா?
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆணட்ராய்டு 14 இயங்குதளத்தைச் சார்ந்த ஒன் யுஐ 6 அப்டேட் (Android 14 OS based One UI 6 update) கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆனது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனுக்கு பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34) பயனர்கள் இந்த புதிய அப்டேட் பெறுவதற்கு 2ஜிபி வரை தேவைப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட்டுகள், புதிய எமோஜிகள், புதிய வகை லாக் ஸ்கிரீன், புதிய மீடியா பிளேயர் விட்ஜெட் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுவருகிறது இந்த ஆணட்ராய்டு 14 அப்டேட்.

இதுதவிர சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனுக்கு நவம்பர் செக்யூரிட்டி 2023 பேட்ச் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F34 5G specifications) 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட்(AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி. பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூட இந்த போனின் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.
எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (AMOLED) ஆதரவும் உள்ளது. மேலும் இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். எனவே இந்த ஸ்மார்டபோனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
மேலும் கைரேகை ஸ்கேனர், என்எப்சி, வைஃபை, புளூடூத் வி5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








