ஓஹோ இப்படிதான் இருக்குமா?- மார்ச் 8 வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி- விலை, அம்சங்கள்!
சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி மார்ச் 8 ஆம் தேதி தொடங்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக லைவ் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் கிடைக்கும் தன்மை மற்றும் முக்கிய அம்சங்கள் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் நேரடி படங்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்பு ஆன்லைனில் காணப்பட்டன. இந்த ஸ்மார்ட்போனானது அக்வா ப்ளூ வண்ண விருப்பத்தில் காணப்படுகிறது. பிளிப்கார்ட் பட்டியல் இந்த சாதனம் ஃபாரஸ்ட் க்ரீன் வண்ண வகைகளில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வெளியான படங்கள்
சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி லைவ் படங்கள் ஆன்லைனில் வெளியாகி இருக்கின்றன. நேரடி படங்களை Taknikiworld என்ற டுவிட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். வெளியான படங்கள் வரவிருக்கும் கேலக்ஸி எஃப்23 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பேனல்கள் இரண்டையும் காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் இருக்கும் எனவும் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் மேல் இடது மூலையில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்
சாம்சங் கேலக்ஸி எஃப் தொடரின் கீழ் அடுத்த ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஃப்22 நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். கேலக்ஸி எஃப்23 5ஜி சாதனம் வாரிசாக வந்தாலும் இதன் அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றில் அதீத மாற்றங்கள் கொண்டிருக்கின்றன.

சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி அறிமுகம்
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு மார்ச் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என சாம்சங் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மைக்ரோசைட் ஆனது ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் பிற சமூக ஊடக தளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் வெளிர் நீலம் மற்றும் க்ரீன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பிளிப்கார்ட்டில் சாம்சங்கின் மைக்ரோசாஃப்ட் படி, டிஸ்ப்ளே ஆனது கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனத்தின் முன்புறத்தில் செல்பி கேமரா சென்சார் உடனான வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் சமீபத்திய முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் ஆதரவுடனான காட்சி இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அமோலெட் மற்றும் எல்சிடி அமைப்போடு இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி கேமரா ஆகியவை இடம்பெறும் என தகவல்கள்தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் குறித்து பார்க்கையில் இது 5ஜி ஆதரவு மற்றும் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் உடன் வரும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications