அடுத்த அட்டகாசம் மார்ச் 8: வித்தியாசமான சிறந்த அம்சங்களோடு சாம்சங் கேலக்ஸி எஃப் 23 5ஜி!
சாம்சங் கேலக்ஸி எஃப் தொடரின் கீழ் அடுத்த ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஃப் 23 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஃப்22 நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். கேலக்ஸி எஃப்23 5ஜி சாதனம் வாரிசாக வந்தாலும் இதன் அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றில் அதீத மாற்றங்கள் கொண்டிருக்கின்றன.

சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி அறிமுகம்
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு மார்ச் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என சாம்சங் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மைக்ரோசைட் ஆனது ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் பிற சமூக ஊடக தளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் வெளிர் நீலம் மற்றும் க்ரீன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பிளிப்கார்ட்டில் சாம்சங்கின் மைக்ரோசாஃப்ட் படி, டிஸ்ப்ளே ஆனது கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனத்தின் முன்புறத்தில் செல்பி கேமரா சென்சார் உடனான வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மூன்று பின்புற கேமரா அமைப்பு
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்போடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேக ஸ்கேனர் அம்சத்தோடு வரும் எனவும் இதில் யூஎஸ்பி டைப் சி போர்ட் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் சமீபத்திய முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் ஆதரவுடனான காட்சி இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அமோலெட் மற்றும் எல்சிடி அமைப்போடு இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேல்கஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி கேமரா ஆகியவை இடம்பெறும் என தகவல்கள்தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் குறித்து பார்க்கையில் இது 5ஜி ஆதரவு மற்றும் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் உடன் வரும் என கூறப்படுகிறது.

50 எம்பி கேமரா அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்ப்பு
கசிவான தகவல் குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போனானது 48 எம்பி கேமரா கொண்டிருக்கிறது. கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி அல்லது 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications