விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எப்22.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண் SM-E225F/DS என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.4-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எப்22 மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே கேமிங், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான கேலக்ஸி எப்22 மாடல்.

சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனில் மாடல் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா உடன் மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும்
என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எப்22 மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி ,3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்22 மாடல். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்22ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications