அடிச்சான் பாரு Samsung.. மார்க்கெட்டே உறைஞ்சுடுச்சு.. மலிவு விலை.. 5G போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை புரட்டிப்போட போகும் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகியுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) சாதனம். மிகவும் குறைந்த விலையில் தரமான அம்சங்களை பேக் செய்த 5G போனாக இது வெளிவந்துள்ளது.
சாம்சங் (Samsung): ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) சாதனங்களுக்கு நிகரான ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் நிறுவனமாக சாம்சங் (Samsung) திகழ்கிறது. இந்த முன்னணி நிறுவனம், இப்போது அதன் F சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக சாம்சங் கேலக்ஸி F15 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G): புதிய சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இரண்டு ஸ்டாராஜ் வேரியண்ட் விருப்பங்களுடன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒரு வேரியண்ட்டாகவும்; 6ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் உடன் மற்றொரு வேரியண்ட்டாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
அசல் விலை: சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.13,499 என்று பட்டியல் விபரம் காண்பிக்கிறது. அதேபோல், 6ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.14,999 என்ற விலையில் வெளிவரும் என்று பட்டியல் விபரம் காண்பிக்கிறது.
சிறப்பு சலுகை விலை: இருப்பினும், பிளிப்கார்ட் விளம்பரம் மிகவும் சுவாரசியமாக இந்த சாதனம் ரூ. 11,999 விலை முதல் கிடைக்குமென்று குறிப்பிட்டுள்ளது. இது நிறுவனம் அறிவித்துள்ள ரூ. 1,500 ஆரம்பகால தள்ளுபடிக்கு பிறகு கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், குறிப்பிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

5ஜி போன்: இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் இன்று இரவு 7 மணி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் பெஸ்ட் அம்சங்களுடன் புதிய 5ஜி போனை வாங்க விரும்புகிறார்கள் என்றால், கட்டாயம் நீங்கள் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போனை கருத்தில்கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி F15 5G (Samsung Galaxy F15 5G) சிறப்பம்சம்:
- 6.5" இன்ச் கொண்ட sAMOLED டிஸ்பிளே
- 90 Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட்
- 4GB | 6GB ரேம் மற்றும் 128GB | 256GB ஸ்டோரேஜ்
- 1 TB எக்பேண்டபிள் மெமரி
- 50 MP + 5 MP + 2 MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 13MP செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 14 (Android v14)
- சாம்சங் ஒன் யூஐ (Samsung One UI)
- ப்ளூடூத் v5.2 (Bluetooth v5.2)
- 6000mAh பேட்டரி
- 25W பாஸ்ட் சார்ஜிங் (25W fast charging)
- பிளாக் (Black), பர்பிள் (Purple), மின்ட் (Mint)
- விலை ரூ.11,999 முதல்


Click it and Unblock the Notifications








