Home
News

சபாஷ் போட வைக்கும் ஆஃபர்... 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் mobile bonanza sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஃப்13 (SAMSUNG Galaxy F13) ஸ்மார்ட்போனுக்கு 36 சதவீதம தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் முன்பு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் இந்த போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் சாம்சங் போன்..

சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனானது 1080 x 2408 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Gorilla Glass 5) உடன் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் பட்ஜெட் ஸ்மார்ட்போனான இது சாம்சங்கின் சொந்த ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 (Exynos 850) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 1டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி (MIcroSD) கார்டிற்கான ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயரான ஒன் யுஐ (One UI) வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இந்த பேட்டரி 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெறுகிறது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

50எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் இதில் 5ஜி ஆதரவு இல்லை. அதாவது 4ஜி ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் சாம்சங் போன்..

அதாவது 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் வி5.0, GPS/ A-GPS, யூஎஸ்பி டாய்-சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டிவிருப்பங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை மிகவும் குறைவு. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சிறந்த வடிவமைப்பு மற்றும் தரமான டிஸ்பிளே, பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒரு நல்ல 4ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 போனை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F13 gets 36 percent discount on Flipkart: check new price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X