இப்போ நீங்களா?- இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன் விலை திடீர் அதிகரிப்பு: பட்ஜெட் விலையில் இருந்துச்சு?
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தைகளை ஆக்கிரமித்த நிறுவனங்களில் சாம்சங், சியோமி, போக்கோ உள்ளிட்டவைகளுக்கு பெரும் பங்குண்டு. கடந்த சில மாதங்களாகவே பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விலை அதிகரிப்பை சந்தித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் இணைந்துள்ளது.

பட்ஜெட் விலை சாதனம்
சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் விலையின் இரண்டு சாதனங்களுக்கு விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. இந்த சாதனங்களானது சாம்சங் கேலக்ஸி எஃப்12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்கள் ஆகும். தற்போது இந்த சாதனங்களில் புதிய விலை பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. சாம்சங் சாதனம் பட்ஜெட் விலையில் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கும் பெரும்பாலான நபர்களின் தேர்வு சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 12
சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 12 சாதனம் இந்தியாவில் சந்தித்த விலை உயர்வு குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஆகிய சாதனங்கள் முறையே ரூ.500 விலை உயர்வு பெற்றிருக்கிறது. சாம்சங் எம் 12 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட் விலை ரூ.10,999 ஆக இருந்த நிலையில் தற்போது விலை உயர்வு அறிவித்த பிறகு இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.11,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

அதிகரிக்கப்பட்ட விலை
சாம்சங் கேலக்ஸி எஃப் 12 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்டின் விலை ரூ.10,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,499 ஆக இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி என்ற வேரியண்டில் கிடைக்கிறது இதற்கும் ரூ.500 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.11,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,499 ஆக இருக்கிறது. சாம்சங் கேல்கஸி எஃப் 12 ஸ்மார்ட்போனானது செலிஸிடல் பிளாக், கடல் பச்சை மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

6.5 இன்ச் எல்சிடி ப்ளஸ் டிஸ்ப்ளே
சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 12 இரண்டு சாதனங்களின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த இரண்டு சாதனங்களும் 6.5 இன்ச் எல்சிடி ப்ளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்போடு வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த சாதனம் எக்ஸினோஸ் 850 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. ஒன் யூஐ 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 12
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 850 செயலி இடம்பெறும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications