Home
News

Samsung சாம்ராஜ்யத்தில இப்படி ஒரு Mobile-ஆ? விலை ரூ.8000 கூட இல்லை.. இவ்வளவு கம்மியா? எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் (Samsung) என்ற ஜாம்பவான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் இருந்து, ரூ.8,000 விலைக்குள் ஒரு புதிய மொபைல் சாதனம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) இந்திய மார்க்கெட்டை மிரளவிட போகும், ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலாக இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது M சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்தது என்றாலும், அதே அம்சங்களுடன் லெதர் பினிஷ் உடன் அடுத்தபடியாக நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனமாக F05 மாடல் வெளிவந்துள்ளது.

ஆம், சாம்சங் நிறுவனம் இப்போது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05) ஸ்மார்ட்போன் சாதனத்தை லெதர் பினிஷ் அம்சத்துடன் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் Samsung Galaxy F05 சாதனத்தை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7,999 என்ற மிக குறைந்த மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. விலை வெறும் 7999 என்றால் இதன் அம்சங்கள் சுமாராக தானே இருக்குமென்று சிலர் கருதுவீர்கள்.

Samsung சாம்ராஜ்யத்தில இப்படி ஒரு Mobile-ஆ? விலை ரூ.8000 கூட இல்லை..

Samsung சாம்ராஜ்யத்தில இப்படி ஒரு Mobile-ஆ? விலை ரூ.8000 கூட இல்லை:

அது தான் இல்லை, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05) சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட 720 x 1600 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட HD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சாம்சங் மொபைல் சாதனம் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் உடன் வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05) டிவைஸ் 4GB LPDDR4X ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. இதுவொரு eMMC 5.1 ஸ்டோரேஜ் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சாதனம் 1TB வரையிலான மைக்ரோஎஸ்டி (1TB microSD card) கார்டு ஸ்லாட் ஆதரவை கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் ஒன்யூஐ கோர் 6.0 இல் இயங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05) சாதனம் 50MP ரியர் கேமரா உடன் 2MP டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமராவை (dual rear camera) கொண்டுள்ளது. இது பின்புற LED பிளாஷ் உடன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05) போனின் முன்பக்கத்தில் நிறுவனம் 8MP செல்பி கேமராவை வழங்கியுள்ளது. போனின் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ஆதரவையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05):

3.5mm ஆடியோ ஜாக் உடன் இது வருகிறது. இந்த சாதனம் டூயல் 4ஜி VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type-C சார்ஜிங் போர்ட் போன்றவற்றை கொண்டுள்ளது. இது 5000mAh அளவு கொண்ட பேட்டரி உடன் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வாழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05) 4GB + 64GB டிவைஸ் இந்தியாவில் ரூ. 7999 விலையில் விற்பனையாகவுள்ளது. இதன் விற்பனை வரும் செப்டம்பர் 20, 2024 ஆம் தேதி முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேசான் வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என்று சாம்சங் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X