பாக்கெட்டில் வெடித்த சாம்சங்; என்ன காரணம்.? பீதியில் வெளியான சாம்சங் அறிக்கை.!

|

உங்கள் பேஸ்புக் அல்லது வாட்ஸ்ஆப் க்ரூப் சாட்டை திறந்து பாருங்கள் சமீபத்தில் மிகவும் வைரலான ஒரு வீடியோவை நிச்சயம் காண்பீர்கள். நெடுங்காலமாக ரெட்மீ கருவிகளை கேலி செய்யும் நெட்டிசன்கள் கவனம் தற்போது சாம்சங் பக்கம் திரும்பியுள்ளது.

பாக்கெட்டில் வெடித்த சாம்சங்; என்ன காரணம்.? பீதியில் வெளியான அறிக்கை.!

ஆம். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று, இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவான வீடியோ காட்சியொன்று, பயனர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த சாம்சங் போன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை வெளிப்படுத்தியது. வெடிப்பிற்கு உள்ளானது சாம்சங் போன் தான.? அப்படியானால் அது என்ன மாடல்.? அது ஏன் வெடித்தது என்பதற்கான சாம்சங் நிறுவனத்தின் விளக்கம் என்ன.?

கடந்த 2013-ல் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்.!

கடந்த 2013-ல் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்.!

பதிவாகியுள்ள அந்த வீடியோ யூட்யூப்-பில் வெளியிடப்பட்டு உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் வெளியான தவகவலின்படி வெடிப்பிற்கு உள்ளான கருவி கடந்த 2013-ல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி டூயோஸ் என்று அறியப்பட்டது.

வெடிப்பு சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.!

வெடிப்பு சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.!

இந்த தொலைபேசி ஒரு பழைய கேலக்ஸி சாதனமாக இருப்பதால் அதன் பேட்டரி பலவீனம் அடைந்திருக்கலாம் அல்லது பாதிப்பிற்கு உள்ளான பயனர் நிறுவனத்தின் சொந்த பேட்டரியை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். அதுதான் வெடிப்பு சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது என்ற கருத்துக்கள் நிலவின.

சாம்சங் அதிகாரப்பூர்வ அறிக்கை.!

சாம்சங் அதிகாரப்பூர்வ அறிக்கை.!

இந்நிலைப்பாட்டில் இந்த சம்பவம் பற்றிய தகவலை அறிந்த சாம்சங் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. வெடித்து சிதறிய கருவியில் ஒரு மூன்றாம் தரப்பு பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த வெடிப்புக்கு காரணம் என்று அறிவித்துள்ளது.f

மிகவும் மலிவுடையதாக இருக்கிறது.!

மிகவும் மலிவுடையதாக இருக்கிறது.!

நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அசல் மின்கலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருப்பினும் கூட, பயனர்கள் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிய மின்கலன்களை பயன்படுத்ததான் செய்கின்றன. ஏனெனில் மூன்றாம் தரப்பு பேட்டரிகள் அசல் ஒன்றைக் காட்டிலும் மிகவும் மலிவுடையதாக இருக்கிறது. அத்துடன் இன்னும் எளிதாக கிடைக்கின்றன.

வெடிப்புகள் ஒன்றும் புதிதல்ல.!

வெடிப்புகள் ஒன்றும் புதிதல்ல.!

இந்த வெடிப்பு சம்பவத்தில் பயனர் காயமடையவில்லை என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் இதுபோன்ற சாம்சங் வெடிப்புகள் ஒன்றும் புதிதல்ல, சமீப காலங்களில் அடிக்கடி நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீதி மேலோங்கியுள்ளது.!

பீதி மேலோங்கியுள்ளது.!

அதன் கேலக்சி எஸ்8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை தொடர்ந்து மிகவும் கவனமாக செயல்பட்ட சாம்சங் நிறுவனம், சிறிது காலமாக எந்த விதமான வெடிப்பு சம்பவங்களிலும் சிக்காமல் இருந்தது. மேலும் சாம்சங் ஸ்மார்போன்களின் பெயர் எங்கும் அடிபடாத வண்ணம், ரெட்மீ கருவிகளின் மீதான பீதி சற்று ஓங்கியிருந்தது. தற்போது இரண்டு கருவிகளின் மீதான அச்சமும் மேலோங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Duos explodes in man's pocket, company says it's due to third-party battery. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X