Home
News

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Chromebook Go சாதனம் அறிமுகம்.! முழு விவரம்

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி Chromebook Go சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் விலை மற்றும் விற்பனை பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். இப்போது சாம்சங் கேலக்ஸி Chromebook Go மாடலின் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 14-இன்ச் டிஎப்டி எச்டி டச்ஸ்கீரின் டிஸ்பிளே

14-இன்ச் டிஎப்டி எச்டி டச்ஸ்கீரின் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி Chromebook Go மாடல் ஆனது 14-இன்ச் டிஎப்டி எச்டி டச்ஸ்கீரின் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான சாதனம்.

இன்டெல் UHD கிராபிக்ஸ்

இன்டெல் UHD கிராபிக்ஸ்

சாம்சங் கேலக்ஸி Chromebook Go மாடல் ஆனது இன்டெல் செலரான் N4500 (ஜாஸ்பர் லேக்) செயலி மூலம் இயக்கப்படுகிறது. பின்பு இரண்டு CPU கோர்கள் மற்றும் இன்டெல் UHD கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும். அதபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட்

மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட்

சாம்சங் கேலக்ஸி Chromebook Go மாடலில் 4ஜிபி/8ஜிபி ரேம் வசதி உள்ளது. அதேபோல் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது, அதாவது மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

42.3Wh பேட்டரி ஆதரவு

42.3Wh பேட்டரி ஆதரவு

இந்த புதிய கேலக்ஸி Chromebook Go மாடல் ஆனது க்ரோம்புக்ஒஎஸ் வசதியில் இயங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 42.3Wh பேட்டரி ஆதரவும் 45W யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் ஆதரவும் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாதனம். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள், யூ.எஸ்.பி 3.2

இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள், யூ.எஸ்.பி 3.2 போர்ட், 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக்,மைக்ரோஃபோன் காம்போ ஜாக், எல்டிஇ பதிப்பில் நானோ சிம்ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி Chromebook Go சாதனம்.

k Go சாதன

இந்த கேலக்ஸி Chromebook Go சாதனத்தில் 2 x 1.5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மல்டிடச் டிராக்பேட் மற்றும் 720p வெப்கேம் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 1.45 கிலோகிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி Chromebook Go மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Chromebook Go Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X