Home
News

மலிவு விலை, உயர்தர சிறப்பம்சம்- சாம்சங் கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் கோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் கேலக்ஸி புக் 2 சீரிஸ் விண்டோஸ் லேப்டாப் கடந்த மாதம் பார்சிலோனாவில் நடந்த எம்டபிள்யூசி 2022 நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த லேப்டாப் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி புக் 2 சீரிஸ், கேலக்ஸி புக் 2 கோ லேப்டாப்

சாம்சங் கேலக்ஸி புக் 2 சீரிஸ், கேலக்ஸி புக் 2 கோ லேப்டாப்

சாம்சங் கேலக்ஸி புக் 2 சீரிஸ், கேலக்ஸி புக் 2 கோ லேப்டாப்கள் உள்ளிட்ட சாதனங்கள் இந்தியாவில் வியாழன் அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விண்டோஸ் மடிக்கணினிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2022 நிகழ்வில் அறிமுகமானது. தற்போது சாம்சங் தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நோட்புக் பிரிவில் மீண்டும் ஒரு தொடர் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி புக் 2 தொடர்

சாம்சங் கேலக்ஸி புக் 2 தொடர்

சாம்சங் கேலக்ஸி புக் 2 தொடரில் இடம்பெற்றுள்ள மடிக்கணினிகள் குறித்து பார்க்கலாம், சாம்சங் கேலக்ஸி புக் 2 தொடரில் கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 360, கேலக்ஸி புக் 2 ப்ரோ, கேலக்ஸி புக் 2 ப்ரோ 360, கேலக்ஸி புக் 2 பிஸ்னஸ் மற்றும் கேலக்ஸி புக் கோ என ஆறு மடிக்கணினிகள் இடம்பெற்றுள்ளன. கேலக்ஸி புக் கோ மாடலை தவிர்த்து பிற அனைத்து மடிக்கணினிகளும் 12 ஜென் இன்டெல் கோர் செயலிகளால் இயக்கப்படுகின்றன.

மிகவும் மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி புக் கோ

மிகவும் மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி புக் கோ

சாம்சங் கேலக்ஸி புக் கோ மிகவும் மலிவு விலையில் இருக்கிறது. இதன் விலை ரூ.38,990 ஆகும், இந்த சாதனம் வாங்கும் போது ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ லேப்டாப் ஆனது ரூ.65,900 முதல் தொடங்குகிறது. அதேபோல் கேலக்ஸி புக் 2 360 அடிப்படை மாடலுக்கு ரூ.99,990 என விற்பனைக்கு வருகிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 ஆகியவை பொறுத்தவரை, இதன் ஆரம்ப விலை ரூ.1,06,990 மற்றும் ரூ.1,15,990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி புக் 2 சாதனம் ரூ.1,04,990-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்பதிவு செய்து வாங்கும் போது கூடுதல் சலுகைகள்

முன்பதிவு செய்து வாங்கும் போது கூடுதல் சலுகைகள்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சாதனத்தை முன்பதிவு செய்து வாங்கும் போது சாம்சங் உங்களுக்கு கேலக்ஸி பட்ஸ் 2 சாதனத்தை ரூ.999-க்கும், 24 இன்ச் மானிட்டர் ரூ.2,999-க்கும் உடனடி கேஷ்பேக் சலுகையாக ரூ.5000 வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 ப்ரோ, கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் அறிமுகம்

13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 ப்ரோ, கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், கேலக்ஸி புக் 2 ப்ரோ மற்றும் கேலக்ஸிபு புக் 2 ப்ரோ 360 ஆகிய சாதனங்கள் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் முழு எச்டி தெளிவுத்திறன் ஆதரவோடு அமோலெட் டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 செயலிகள் மூலம் இயங்குகிறது. சாம்சங் இந்த சாதனங்களில் முழு எச்டி வெப்கேம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

12-வது இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 செயலிகள்

12-வது இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 செயலிகள்

கேலக்ஸி புக் 2 360 சாதனமானது 12-வது இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 செயலிகள் உடன் வருகிறது. எச்டி வெப் கேம் மற்றும் 13.3 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இதை அணுகுவதற்கு மிக சிறப்பாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி புக் 2 பிஸ்னஸ் சாதனமானது இயல்பு மற்றும் செயல்திறனை மையப்படுத்தி தொழில் வல்லுனர்களுக்கு தேவையான அம்சங்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் அமோலெட் பேனல் ஆதரவின்றி வருகிறது. 1080 பிக்சல் வெப் கேம், வயர்ட் முறையில் இணைய இணைப்பு பெற ஈத்தர்நெட் போர்ட் மற்றும் சிம் இணைப்பு ஆகிய ஆதரவை இதில் பெறலாம். கேலக்ஸி புக் கோ ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Book 2, Galaxy Book Go Launched in India With 12 Gen intel Core Processors: Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X