Home
News

அதிரடி விலைக்குறைப்பு : கேலக்ஸி ஏ9 ப்ரோ நாளை முதல் விற்பனைக்கு.!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது நாளை முதல் அதிரடியான விலைக்குறைப்புடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

By Ilamparidi

கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது தாயாரிப்புகளால் குறிப்பிடத் தகுந்த அளவிலான வாடிக்கையாளார்களைக் கொண்டுள்ளது.அது மட்டுமன்றி தனது தயாரிப்புகளில் தமது வாடிக்கையாளர்களுக்காக புதுப்புது அம்சங்களையும் சேர்த்து வருகிறது.
தற்போது பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும்,பல்வேறு புதிய அம்சங்களுடன் தமது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதில் அடங்கும்.

அதேவேளையில்,தனது சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ ஸ்மார்ட்போனை அதிரடியான விலைக்குறைப்புடன் நாளை முதல் களமிறங்குகிறது.அதுகுறித்த அதிகப்படியான தகவல்கள் கீழே..

சாம்சங்:

சாம்சங்:

கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது தயாரிப்புகளின் வாயிலாக அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.அதற்கான காரணம் அதன் தயாரிப்புகளில் அடிக்கடி புதுப்பிக்கப்படும் அம்சங்களும்,நேர்த்தியான தயாரிப்பும் தான்.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய எம்டபுள்யூசி மாநாட்டிலும் தனது டேப் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை வெளியிட்டது.ஆயினும் சமர்ட்போன் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 வெளியிடப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ:

சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான சாம்சங் கேலக்சி ஏ9 ப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.அது கொண்டிருந்த அம்சங்களுக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதோடு மட்டுமன்றி குறிப்பிடத்தகுந்த அளவினுக்கு விற்பனை அளவினையும் அடைந்தது.நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய எம்டபுள்யூசி மாநாட்டில் வெளியிடப்படக்கூடும் என் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்புகள் வெளிவராத நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ விலைகுறைப்புடன் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ வானது ஆண்ட்ராய்டு 6 மார்ஷ்மல்லோவ்,6 இன்ச் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே 1080x1920 பிக்சல்ஸ்,1.8 ஜிஎச்இசட் ஆக்டா கோர் சினாப்ட்ராகன் 652 ப்ரோசஸர்,4 ஜிபி ரேம்,32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,256 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்ட்ரோரேஜ்,4ஜி,வை-பை 802.11,ப்ளூடூத் வெர்ஷன் 4.2,யூஎஸ்பி 2.0 மற்றும் என்எப்சி ஐ ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ எல்இடி யுடன் கூடிய 16 எம்பி மெயின் கேமரா,எப்/1.9 அபெர்சர்,ஓஐஎஸ்,8 எம்பி முன்பக்க கேமரா எப்/1.9 அபெர்சர்,மேலும் பிராக்சிமிட்டி சென்ஸார்,எம்பியெண்ட் லைட் சென்ஸார்,ஆக்செலரோ மீட்டர்,மெக்னெட்டோ மீட்டர் மற்றும் கிரையோஸ்கோப் உள்ளிட்ட அம்சங்களைப் பெற்றுள்ளது.
பேட்டரியைப் பொறுத்தமட்டில் 5000எம்ஏஎச் திறனுள்ள பேட்டரியைக்கு கொண்டுள்ளது.ஹோம் பட்டனுடன் கைரேகை சென்ஸாரும் உள்ளது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு ரூபாய் 32,490க்கு விற்பனையாகிக் கொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ வானது,தற்போது ரூபாய் 2,590 அதிரடியாக விலை குறைக்கப்பட்டு ரூபாய் 29,900க்கு நாளை முதல் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

முதல் பார்வை: எல்ஜி ஜி6.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A9 Pro Price Cut to Rs. 29,900 When It Hits Flipkart This Friday.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X