சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி அறிமுகம்: சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா- விலை தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடவே சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது வரும் நாட்களில் முன்பதிவுகளுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓ சூப்பர் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ தொடரில் புதிதாக சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா மற்றும் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனானது இந்த மாத தொடக்கத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமராக்கள், 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகிய ஆதரவோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஆகிய இரண்டும் ஐபி67 மதிப்பீட்டு ஆதரவோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவோடு வருகிறது. சாம்சங் சமீபத்தில் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி, கேலக்ஸி ஏ23 மற்றும் கேலக்ஸி ஏ13 ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியது.

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி கிடைக்கும் தன்மை
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது அமேசிங் ஆஷ், அமேசிங் மின்ட் மற்றும் அமேசிங் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி அமேசிங் பிளாக், அமேசிங் ப்ளூ, அமேசிங் பீச் மற்றும் அமேசிங் வைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது வரும் நாட்களில் சாம்சங்.காம், முன்னணி விற்பனை கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்லைன் போர்டல்கள் மூலம் முன்பதிவுகளுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த சாம்சங் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆகிய வேரியண்ட்கள் ஆகும். அதேபோல் இந்த சாம்சங் மாடலின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையும் அறிவிக்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஆனது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.30,800 என ஐரோப்பாவில் அறிமுகமானது. அதேசமயத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி சாதனத்தையும் அறிவித்தது. சாம்சங் கடந்த வாரம் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.34,499 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடல் விலை தோராயமாக ரூ.35999 எனவும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1 ஆதரவோடு வருகிறது. இது நான்கு ஆண்டுகள் வரையிலான ஆண்ட்ராய்டு ஓஎஸ் மேம்பாட்டு உறுதிப்பாட்டுடன் வருகிறது. அதேபோல் ஐந்து வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெறும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 800 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பேனல் பாதுகாப்புடன் வருகிறது. ஹூட்டின் கீழ் கேலக்ஸி ஏ73 5ஜி ஆனது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேம் ப்ளஸ் அம்சத்துடன் வருகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் உள்ளமைக்கப்பட்ட ரேமை 16 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.
108 எம்பி முதன்மை கேமரா ஆதரவு
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா ஆதரவோடு வருகிறது. அதேபோல் புகைப்படங்களில் தேவையற்ற காட்சிகளை அகற்றுவதற்கான ஆப்ஜெக்ஸ் அழிப்பு அம்சம், பழைய புகைப்படங்களை மீட்டெடுக்க ஏஐ புகைப்பட ரீமாஸ்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுயவிவரப் புகைப்படங்களுக்கான போர்ட்ரெய்ட் பயன்முறை உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. பிற பின்புற கேமரா சென்சார்கள் குறித்த விவரங்கள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.
25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது மெமரி விரிவாக்க வசதியோடு வருகிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1 ஆதரோவடு வருகிறது. இது நான்கு வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் புதுப்பிப்பு மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு மேம்பாட்டு ஆதரவைக் கொண்டிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 1280 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இது ஓஐஎஸ் அடிப்படையிலான 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி கேமரா வசதி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications