Home
News

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி இந்திய விலை, முன்பதிவு தேதி அறிவிப்பு- எல்லாமே உயர்தர அம்சம்., தாராளமா வாங்கலாம்!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்டி ஓ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 800 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் பாதுகாப்புக்கு கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது அதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நான்கு ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்தியது. அப்போது சாம்சங் நிறுவனம் சாதனத்தின் விலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சாதனம் விரைவில் முன்பதிவுக்கு கிடைக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது நான்கு வருட ஓஎஸ் புதிப்புப்பு ஆதரவு கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

இ-ஸ்டோர் மூலம் முன்பதிவு

இ-ஸ்டோர் மூலம் முன்பதிவு

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி சாதனம் இந்தியாவின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். சாம்சங் இந்தியா இ-ஸ்டோர் மூலம் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்ய இப்போது கிடைக்கிறது. ஏப்ரல் 8 முதல் இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி உடன் கிடைக்கும். இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலையானது ரூ.41,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.44,999 என விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல் பயனர்கள் இந்த சாதனத்தை மூன்று வண்ண விருப்பங்களில் வாங்கலாம். அது அமேசிங் மின்ட், அமேசிங் ஆஷ் மற்றும் அமேசிங் வைட் ஆகியவை ஆகும். அதேபோல் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்கள் மற்றும் சாம்சங் ஃபைனானஸ்+ மூலம் பயனர்கள் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.3000 வரை கேஷ்பேக் சலுகையை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி இந்தியாவின் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி இந்தியாவின் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 800 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் பாதுகாப்புக்கு என இதன் மேலே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி ஆதரவு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி ஆதரவு

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான உள்சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் சாம்சங் கூடுதலாக 8ஜிபி வரை மெய்நிகர் ரேம் விரிவாக்கத்தை அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

108 எம்பி முதன்மை கேமரா

108 எம்பி முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது ஓஐஎஸ்-க்கான ஆதரவோடு 108 எம்பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் ஆகியைவைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனில் 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் இதற்கான சார்ஜர் தனியாக வேண்டும் என்பதாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A73 5G Indian Price, Booking Date Announced: Premium Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X