Home
Mobile

ஸனாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ72 4ஜி.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ7 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகிறது. அதன்படி விரைவில் வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ72 4ஜி சாதனம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று
கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன்

வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியைஅடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

32எம்பி செல்பி கேமரா

32எம்பி செல்பி கேமரா

கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என
+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ்,

கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.39,400-விலையில் அறிமுகம்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A72 4G May Launching Soon in India: Here the Price and Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X