பட்ஜெட் கிங்.. Samsung இன்று அறிமுகம் செய்யும் 2 புது 5G போன்.. sAMOLED டிஸ்பிளேவுடன் மிரட்டலான லுக்..
சாம்சங் (Samsung) நிறுவனம் இப்போது பட்ஜெட் மற்றும் மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget segment) 2 ஸ்மார்ட்போன் சாதனங்களை இன்று அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக 2 ஸ்மார்ட்போன்களின் விலை விபரங்கள் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் இன்று சாம்சங் கேலக்ஸி A55 5ஜி (Samsung Galaxy A55 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி (Samsung Galaxy A35 5G) என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை மார்ச் 14ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்கிறது. இந்த இரண்டு போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், இவற்றில் உள்ள அம்சங்கள் வேறுபடுகின்றன.

சாம்சங் கேலக்ஸி A55 5ஜி (Samsung Galaxy A55 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி (Samsung Galaxy A35 5G) ஆகிய இரண்டு போன்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள் என்னவென்றால், சாம்சங் கேலக்ஸி A55 5ஜி சாதனம் க்ளாஸ் சாண்ட்விச் டிஸைனுடன் மெட்டல் பாடியை கொண்டுள்ளது. மறுபுறம், சாம்சங் கேலக்ஸி A35 5ஜி பிளாஸ்டிக் பிரேம் உடன் கிளாஸ் மேற்புற பேக்பேனல் கவரை கொண்டுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சத்தை பார்க்கையில், இந்த இரண்டு போன்களும் 6.6" இன்ச் அளவு கொண்ட sAMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Full HD+ உடன் 1080 × 2340 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 1000 nits பிரைட்னஸ் உடன் விஷன் பூஸ்டர் (Vision Booster) அம்சத்தை கொண்டுள்ளது.
இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus protection) பாதுகாப்புடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி A35 5ஜி சாதனம் எக்சினோஸ் 1380 (Exynos 1380) சிப்செட் உடன் 6GB மற்றும் 8GB ரேம் அம்சத்தை பெறுகிறது. சாம்சங் கேலக்ஸி A55 5ஜி எக்சினோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் உடன் 8GB மற்றும் 12GB ரேம் உடன் வருகிறது.

இரண்டு போன்களும் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இரண்டும் OneUI 6 அடிப்படையிலான Android 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. கேமரா பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி A35 5ஜி டிவைஸ் 50MP (OIS)+ 8MP + 5MP கொண்ட ட்ரிபிள் கேமராவுடன் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A55 5ஜி சாதனம் 50MP (OIS) + 12MP + 5MP உடன் ட்ரிபிள் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. அதேபோல் இவை இரண்டும், 25W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) அம்சத்தையும் ஆதரிக்கிறது.
இது ஆஸம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue), ஆஸம் லீலாக் (Awesome Lilac) மற்றும் ஆஸம் நேவி (Awesome Navy) நிறங்களில் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி A35 5ஜி இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆகும். இதன் விலை முறையே ரூ.30,999 மற்றும் ரூ.33,999 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A55 5ஜி மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. இது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் உடன் முறையே ரூ.39,999 மற்றும் ரூ.42,999 மற்றும் ரூ.45,999 விலையில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








