Samsung விஸ்வரூபம்.. 1 இல்லை 2 புது 5G போன்.. 120Hz sAMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் இரண்டு புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது சாம்சங் கேலக்ஸி A55 5ஜி (Samsung Galaxy A55 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி (Samsung Galaxy A35 5G) மாடல்களாகும்.
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு புதிய சாம்சங் கேலக்ஸி A55 5ஜி (Samsung Galaxy A55 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி (Samsung Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் சாதனங்கள் 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் விஷன் பூஸ்டர் அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் எக்சினோஸ் பிராசஸர் உடன் 12GB ரேம் அம்சத்தை பெறுகிறது.

Samsung Galaxy A35 மற்றும் Samsung Galaxy A55 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் சாம்சங் ஷாப், சாம்சங் ஸ்டோர்ஸ் மற்றும் பிற சில்லறை சேனல்கள் வழியாக மார்ச் 14 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு விற்பனைக்கு வரும். இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 விலையை சாம்சங் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இரண்டு போனின் சிறப்பம்ச விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு சாம்சங் கேலக்ஸி A55 5ஜி (Samsung Galaxy A55 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி (Samsung Galaxy A35 5G) பொங்கலுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள் என்னவென்றால், சாம்சங் கேலக்ஸி A55 5ஜி சாதனம் க்ளாஸ் சாண்ட்விச் டிஸைனுடன் மெட்டல் பாடியை கொண்டுள்ளது. மறுபுறம், சாம்சங் கேலக்ஸி A35 5ஜி பிளாஸ்டிக் பிரேம் உடன் கிளாஸ் படியை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A55 மற்றும் A35 5ஜி சிறப்பம்சம்:
இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.6" இன்ச் அளவு கொண்ட sAMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Full HD+ உடன் 1080 × 2340 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 1000 nits பிரைட்னஸ் உடன் விஷன் பூஸ்டர் (Vision Booster) அம்சத்தை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus protection) பாதுகாப்புடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A35 5ஜி சாதனம் எக்சினோஸ் 1380 (Exynos 1380) சிப்செட் உடன் 6GB மற்றும் 8GB ரேம் அம்சத்தை பெறுகிறது. சாம்சங் கேலக்ஸி A55 5ஜி எக்சினோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் உடன் 8GB மற்றும் 12GB ரேம் உடன் வருகிறது. இரண்டு போன்களும் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இரண்டும் OneUI 6 அடிப்படையிலான Android 14 இயங்குதளத்தில் இயங்குகிறது.
கேமரா பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி A35 5ஜி டிவைஸ் 50MP (OIS)+ 8MP + 5MP கொண்ட ட்ரிபிள் கேமராவுடன் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A55 5ஜி சாதனம் 50MP (OIS) + 12MP + 5MP உடன் ட்ரிபிள் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
அதேபோல் இவை இரண்டும், 25W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் மார்ச் 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue), ஆஸம் லீலாக் (Awesome Lilac) மற்றும் ஆஸம் நேவி (Awesome Navy) நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இவை பட்ஜெட் போன்களாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








