மோதி பார்த்துக்கலாம்! ஒன்னு இல்ல இரண்டு போனை களமிறக்கும் Samsung! ரெடியா இருங்க!
Samsung நிறுவனம் புதிய கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மும்முரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் சிறந்த பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மரா்ட்போனில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை பார்க்கலாம்.

Samsung Galaxy A34 5G மற்றும் Galaxy A34 5G
Samsung Galaxy A34 5G மற்றும் Galaxy A34 5G விலை குறித்து பார்க்கையில், டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் தரப்பில் வெளியாகியுள்ளதாக கூறப்படும் தகவலின்படி, Galaxy A34 5G ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை தோராயமாக ரூ.36,200 எனவும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை தோராயமாக ரூ.41,500 என நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
Galaxy A54 5G விலை
அதேபோல் Galaxy A54 5G ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பக வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களும் சுமார் ரூ.46,000 முதல் ரூ.51,000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது.
Samsung Galaxy A54 5G சிறப்பம்சங்கள்
சாம்சங்கின் Galaxy A54 5G ஸ்மார்ட்போனானது நான்கு வண்ண விருப்பங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், வயலட், வைட் மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் உட்பட டிரிபிள் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.4 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்
டிப்ஸ்டர் SnoopyTech ட்வீட்டின் மூலம் வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி A34 5G ஆனது 6.6 இன்ச் டிஸ்ப்ளே உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆவ்சம் சில்வர், ஆவ்சம் வயலட், ஆவ்சம் லைம் மற்றும் ஆவ்சம் கிராஃபைட் என 4 வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
25W வயர்டு சார்ஜிங் ஆதரவு
Samsung Galaxy A33 இன் வாரிசாக சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த போனானது SM-A346M என்ற மாடல் எண்ணுடன் US ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) என்ற இணையதளத்தில் முன்பு காணப்பட்டது. இந்த பட்டியலின்படி, புதிய ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ப்ளூடூத் SIG தரவுத்தளம் மற்றும் Geekbench தளத்திலும் காணப்பட்டிருக்கிறது.

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. Geekbench இன் சிங்கிள் கோர் சோதனையில் 778 புள்ளிகளும் மல்டி கோர் சோதனையில் 2,322 புள்ளிகளும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது.
48 மெகாபிக்சல் பிரதான கேமரா
Samsung Galaxy A34 5G ஆனது இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) இணையதளத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கா மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








