புகழ் பெற்ற ஸ்மார்ட்போனை மேம்படுத்தி வெளியிடும் Samsung: ரசிகர்கள் குஷியோ குஷி

|

Samsung Galaxy A53 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட் இல் தற்போதே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது புதிய வேரியண்ட் அறிமுகமாக இருக்கிறது.

சாம்சங் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

சாம்சங் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

Samsung நிறுவனம் Samsung Galaxy A53 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது.இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை ரூ.31,499 என நிர்ணயிக்கப்பட்டது.

Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போன் சாம்சங் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இதன் மேம்பட்ட வேரியண்ட்டை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது.

புதிய வேரியண்ட் விரைவில் அறிமுகம்

புதிய வேரியண்ட் விரைவில் அறிமுகம்

Samsung Galaxy A53 5G நிறுவனம் முன்னதாக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நிறுவனம் 256 ஜிபி வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

புது மாடலின் விலை என்ன?

புது மாடலின் விலை என்ன?

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் நிறுவனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த வேரியண்ட் அறிமுகத்தின் போது ரூ.38,999 ஆக இருக்கும் என தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாம்சங் வெளியீட்டு சலுகையாக ரூ.3000 தள்ளுபடியை வழங்கும் என அபிஷேக் குறிப்பிட்டார். இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999 என குறையும்.

விலைக் குறைப்பு அறிவிப்பு

விலைக் குறைப்பு அறிவிப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.34999 எனவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.35,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் விலைக் குறைப்பைப் பெற்றது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3500 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.31,499 எனவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 எனவும் இருக்கிறது.

வண்ணம் மற்றும் கிடைக்கும் தன்மை

வண்ணம் மற்றும் கிடைக்கும் தன்மை

அமேசான் மற்றும் சாம்சங்.காம் போன்ற ஆன்லைன் போர்ட்டலில் இந்த போன் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசிங் ப்ளாக், அமேசிங் ப்ளூ, அமேசிங் வைட் என்ற வண்ண விருப்பத்தில் வெளியானது.

Samsung Galaxy A53 5G சிறப்பம்சங்கள்

Samsung Galaxy A53 5G சிறப்பம்சங்கள்

Samsung Galaxy A53 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் வீதத்துடன் கூடிய 6.5 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பளேவைக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், கார்னிங் கொரில்லா கிளாஸ்5 ஆதரவு உள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.

octa-core Exynos 1280 SoC சிப்செட் ஆதரவு

octa-core Exynos 1280 SoC சிப்செட் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது octa-core Exynos 1280 SoC மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆனது இதே அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 64 எம்பி பிரைமரி லென்ஸ், 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆதரவு ஆகியவை இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A53 5G New Variant Launching Soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X