ஒருபக்கம் விலைக்குறைப்பு., ஒருபக்கம் அப்டேட்- சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

|

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெற்றிருக்கிறது. இந்திய பகுதி மட்டுமின்றி குறிப்பிட்ட ஐரோப்பிய பகுதிகளில் இந்த அப்டேட் வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும் சிறந்த தேர்வாகும். காரணம் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனானது தற்போது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 அப்டேட் ஆதரவையும், விலைக்குறைப்பையும் பெற்றிருக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனுக்கான ஒன் யூஐ 4.0 ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யூஐ 3.1 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்-க்கான புதுப்பிப்பில் A528BXXU1BUL7 என்ற எண் இருக்கிறது. இந்த அப்டேட் ஜனவரி 2022-க்கான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சை சாதனத்தில் கொண்டு வருகிறது. தற்போது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யுஐ 4.0 அப்டேட்டை வழங்குகிறது. இந்த அப்டேட் அளவு 2.2 ஜிபி அளவுடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பு

ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பு

சாம்மொபைல்-ன் அறிக்கையின்படி, ஒன் யுஐ 4.0 ஆனது கேலக்ஸி ஏ52எஸ்-க்காக இந்தியாவில் சில ஐரோப்பிய நாடுகளிலும் வெளி வருகிறது. இந்த பட்டியலில் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ரூமேனியா, சுவிட்சர்லாந்து, போலந்து, லக்சம்பர்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும். அடுத்தடுத்த வாரங்கள் பல பகுதிகளில் இது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பு மேம்படுத்தப்பட்ட எட்ஜ் பேனல், இன் பிக்சர், பாப்-அப் விருப்பங்களோடு அணுகலை வழங்குகிறது.

மென்பொருள் புதுப்பிப்புக்கான அறிவிப்பு

மென்பொருள் புதுப்பிப்புக்கான அறிவிப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் மென்பொருள் புதுப்பிப்புக்கான அறிவிப்பை பெறுவார்கள். ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெறவில்லை என்றால் செட்டிங்ஸ் அமைப்புக்குள் சென்று மென்பொருள் புதுப்பிப்பு தேர்வை கிளிக் செய்ய வேண்டும் பின் அதை பதிவிறக்கம் செய்து நிறுவுதல் என்ற புதுப்பிப்பை தேர்வு செய்ய வேண்டும். இந்த அப்டேட் செய்யும் போது சார்ஜ் 50% இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வசதி

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனானது ரூ.5000 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.35,999 ஆக இருந்த நிலையில் தற்போது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.37,499 ஆக இருந்தது. ஆனால் தற்போது 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.30,999 ஆகவும் 8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.32,999 ஆகவும் இருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த சாதனம் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி அல்ட்ராவைட் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் உள்ளிட்ட வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் ஆப்டிகல் கைரேகை ஸ்கேனர் வசதியும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52s Smartphone Gets Price Cut and Android 12 Update in India: Right time to Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X