6ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் சாதனம் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தில் முந்தைய மாடல்களில் இடம்பெற்ற அதே பேட்டரி, டிஸ்ப்ளே மற்றும் குவாட் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அற்புதமான பிளாக், வைட், வயலட் ஆகிய வண்ண வருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது சர்வதேச சந்தையில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.

அதிகாரப்பூர்வ அறிமுகம்
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு, 32 எம்பி எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி விலை
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை 409 GBP ஆக இருக்கிறது. இந்திய மதிப்புப்படி ரூ.41,800 ஆக இருக்கிறது. அதேபோல் ஐரோப்பாவில் இந்த சாதனம் ரூ.37,400 என்ற விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அற்புத பிளாக், அற்புத வைட், அற்புத வயலட் மற்றும் அற்புத மிண்ட் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் யுகே-வில் ஆகஸ்ட் 24 முதல் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் எனவும் செப்டம்பர் 3 ஆம் தேதிமுதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது அட்ரினோ 642 எல் ஜிபியு கொண்ட ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஏ52 ஹூட்டின் கீழ் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இருக்கிறது. 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

ஆப்டிகல் கைரேகை ஸ்கேனர்
பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனில் திரையின் கீழ் ஆப்டிகல் கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு இயக்கப்படுகிறது.

64 மெகாபிக்சல் பிரதான கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமராவோடு வருகிறது. கூடுதலாக 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறனோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் அதாவது டிஸ்ப்ளேவில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியோடு வருகிறது.

இரட்டை சிம் ஆதரவு, 5ஜி வசதி
இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் ஆதரவு, 5ஜி வசதி, வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. யூஎஸ்பி டைப்சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளும், ஐபி67 மதிப்பிடப்பட்ட நீர் எதிர்ப்பு மற்றும் தூசி எதிர்ப்பு அம்சமும் இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யூஐ 3.1 மூலம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications