Home
News

இன்னும் ஒரே ஒரு நாள் தான்.. அப்புறம் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி நம்ம கையில்..விலை என்ன தெரியுமா?

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை ஆன்லைனில் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் படி, இந்த சாதனம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் உடன் இந்தியாவில் மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்று நிறுவனம் சொல்லியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்?

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்?

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர்1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி சாதனம் ஆனது இரண்டு வேரியண்ட்டுகளில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆசோம் பிளாக், ஆசோம் வயலட் மற்றும் ஆசோம் வைட் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை என்னவாக இருக்கும்?

விலை என்னவாக இருக்கும்?

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.35,999-விலையிலும், பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் ரூ.37,499-விலையிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் கொண்ட சூப்பர் அமோலட்இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OneUI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11

OneUI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11

இந்த சாதனம் OneUI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா +12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5 எம்பி மேக்ரோ லென்ஸ் +5 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்காக 32 எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்போன்மாடல். அதேபோல் இந்த கேலக்ஸி ஏ52எஸ் சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52s 5G India Launch Set for September 1 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X