Home
News

Samsung Galaxy A52 விலை மீண்டும் அதிகரித்தது.. இப்போதுள்ள புதிய விலை என்ன தெரியுமா?

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 52 விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்சங் போன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் அற்புதமான பல சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் கேலக்ஸி A52 ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G சிப்செட் உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் வரை உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ 72 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 52 விலை என்ன?

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 52 விலை என்ன?

சமீபத்திய திருத்தத்தின் விளைவாக, சாம்சங் கேலக்ஸி ஏ 52 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 1000 அதிகரிக்கப்பட்டு ரூ. 27,499 என்ற புதிய விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது இதன் விலை வெறும் ரூ. 26,499 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் சேமிப்பு மாடலின் விலை என்ன?

உயர் சேமிப்பு மாடலின் விலை என்ன?

இதன் அடிப்படை மாறுபாட்டைப் போலவே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பமும் இப்போது அதிகரித்த விலைக் குறியீட்டை பெற்றுள்ளது. இந்த மாடலின் தற்போதைய விலை ரூ. 28,999 ஆகும். இதன் அசல் விலை ரூ. 27,999 என்பது குறிபிடித்தக்கது.

சாம்சங் கேலக்ஸி A52 விவரக்குறிப்பு

சாம்சங் கேலக்ஸி A52 விவரக்குறிப்பு

சாம்சங் நிறுவனத்தின் இந்த விலை உயர்வை முதலில் MySmartPrice அறிவித்தது. இது நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை சேனல்களுக்கும் பொருந்தும். சாம்சங் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் ஆகியவற்றில் அதிகரித்த விலை பிரதிபலித்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி A52 சாதனம் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. இது அண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்

இது 8 ஜிபி ரேம் வரை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/1.8 லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும்.

4,500 எம்ஏஎச் பேட்டரி

4,500 எம்ஏஎச் பேட்டரி

செல்பி மற்றும் வீடியோ சாட் அம்சத்திற்காக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ 52 முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொலைப்பேசியில் 128 ஜிபி ஸ்டோரேஜ் என்பது நிலையானது. இந்த ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் பேட்டரியை 25W கொண்ட பாஸ்ட் சார்ஜ்ஜிங் அம்சத்துடன் வருகிறது. பட்ஜெட் விலையில் ஒரு சிறப்பான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று கருதும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி A52 சாதனம் மிகவும் அருமையான சாய்ஸ் ஆகும்.

ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப செய்திகளின் கூடுதல் தகவல்களுக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விபரங்கள் மற்றும் விலை பற்றி அறிய எங்கள் தகவல் கேலரியை பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52 Price In India Increased By Rs 1000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X