செப்டம்பர் 11: இந்தியா: மிரட்டலான கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 11-ம் தேதி அன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருப்பதால், விரைவாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் அறிமுகம் செய்து உள்ள புதிய சாம்சங் கேலக்ஸி யு50ள ஸ்மார்ட்போனில் ஹையர் ரெசல்யூசன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் இதன் விலை முன்பு அறிமுகம் செய்யப்பட்டசாம்சங் கேலக்ஸி யு50 ஸ்மார்ட்போன் மாடலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சிறப்பம்சங்கள்
6.4' இன்ச் முழு எச்.டி சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி U டிஸ்பிளே
ஆக்டா கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
USB Type-C போர்ட்
இன்-டிப்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார்
15W சார்ஜிங்
4000 எம்.ஏ.எச் பேட்டரி

இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட், வைஃபை 802.11, ஜிபிஎஸ், புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக 169கிராம் எடையில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications