மிரள விடும் சாம்சங்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. 5G போனுக்கு ரூ.2000 விலைக்குறைப்பு.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் சத்தமின்றி தனது 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்துள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது ரூ.2000 விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
முன்பு 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.30,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.32,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.2000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ34 5ஜி மாடலை ரூ.28,999 விலையிலும், 256ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.30,999 விலையிலும் வாங்க முடியும்.

மேலும் விலை குறைக்கப்பட்ட இந்த போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரில் வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A34 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன். பின்பு 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் Dimensity 1080 6nm பிராசஸர் உடன் Mali-G68 MC4 GPU ஆதரவு சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
குறிப்பாக இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ34. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ34 போன். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








