Samsung Galaxy A34 5G போன்ல எதோ 1 இருக்கு! அதுனால தான் எல்லோரும் போட்டி போட்டு வாங்குறாங்க!
சாம்சங் (Samsung) நிறுவனம், சமீபத்தில் Samsung Galaxy A54 5G மற்றும் Samsung Galaxy A34 5G என்ற 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த 2 போன்களின் விற்பனையை நிறுவனம் இப்போது சிறந்த சலுகையுடன் துவக்கியுள்ளது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் பட்ஜெட் செக்மென்ட் Samsung Galaxy A54 5G மற்றும் Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இரண்டு சாதனங்களும் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட் (Flipkart), சாம்சங் (Samsung) இன் சொந்த இ-ஸ்டோர் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகச் சாதனங்களை வாங்கலாம்.

இந்தியாவில் இந்த சாதனங்களை வாங்க விரும்புவோருக்கு, சாம்சங் நிறுவனம் சில பிரத்தியேகமான அறிமுக வெளியீட்டு சலுகைகளை வழங்குகிறது. இந்த பிரத்தியேக நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். இந்த பதிவில் நாம் Samsung Galaxy A34 5G ஸ்மார்ட் போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களையும், அதன் மீது கிடைக்கும் சலுகை விபரங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
பட்ஜெட் செக்மென்ட்டில் ஒரு புது ஸ்மார்ட்போனை 5ஜி இணக்கத்துடன் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், கட்டாயம் இந்த Samsung Galaxy A34 5G போனை மிஸ் செய்ய கூடாது. மிகவும் அற்புதமான அம்சங்களுடன் இந்த சாதனம் இப்போது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இதே ஆஃபர் Samsung Galaxy A54 5G ஸ்மார்ட்போனுக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், Samsung Galaxy A34 5G இன் விலை Samsung Galaxy A54 5G ஸ்மார்ட்போனை விட குறைவாக உள்ளது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 30,999 ஆகவுள்ளது. அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.32,999 ஆகும். இதற்கு மேல் உங்களுக்கு இப்போது அறிமுகம் சலுகையாக சில தள்ளுபடியும் கிடைக்கிறது.

Samsung Galaxy A34 5G ஆகியவை 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 6.6' இன்ச் FHD+ SAMOLED பேனலைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், Samsung Galaxy A34 5G ஆனது Exynos 1380 சிப்செட்டில் இயங்குகிறது. Samsung Galaxy A34 5G சாதனங்கள் 5,000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இந்த சாதனம் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வழங்குகின்றன.
Samsung Galaxy A34 5G மற்றும் Samsung Galaxy A54 5G ஆகிய இரண்டு சாதனங்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI 5.1 ஸ்கின் அவுட் பாக்ஸில் இயங்குகின்றன. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், Samsung Galaxy A34 5G டிவைஸ் 48MP OIS பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த Samsung Galaxy A34 5G போனின் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் Samsung ஆன்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கின்றன. 30,000 பட்ஜெட்டிற்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போனாக இந்த Samsung Galaxy A34 5G இருக்கிறது.


Click it and Unblock the Notifications








