Home
News

Samsung சைலெண்டாக செய்த வேலை.. விலை குறைந்த Samsung Galaxy A34 5G.. புதிய விலை என்ன?

சாம்சங் நிறுவனம் இப்போது அதன் புதிய சாம்சங் கேலக்ஸி A55 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி ஆகிய இரண்டு புதிய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த பிறகு, இதற்கு முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி A34 5ஜி மாடலின் விலையை இப்போது கணிசமாக குறைத்துள்ளது.

ஆம், சாம்சங் கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுகத்தை தொடர்ந்து, சாம்சங் நிறுவனம் இப்போது அதன் சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சைலெண்டாக குறைத்துள்ளது. பட்ஜெட் விலையில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க பிளான் செய்துகொண்டிருந்த நபர்கள் இப்போது இந்த மாடலை தேர்வு செய்யலாம்.

Samsung சைலெண்டாக செய்த வேலை.. விலை குறைந்த Samsung Galaxy A34 5G..

சாம்சங் கேலக்ஸி A35 5ஜி இப்போது 29,999 விலை முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.30,000 மேல் செல்கிறது என்பதனால், பட்ஜெட் பிரியர்கள் பலருக்கும் சில தயக்கம் இருக்கிறது. இன்றைய தேதிக்கு முன் வரை சாம்சங் கேலக்ஸி A34 5ஜி சாதனம் கூட ரூ.30,000 விலை புள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 31% குறைந்துள்ளது. ஆம், அமேசான் இந்தியா தளத்தில் சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை இப்போது ரூ. 23,990 விலை முதல் வாங்க கிடைக்கிறது. இந்த விலை சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கானது என்பது கவனிக்கத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் மாடல் இப்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 24,499 விலையில் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் ட்ரிபிள் கேமராவுடன் ஒரு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோருக்கு இந்த சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஒரு சிறந்த தேர்வாகும்.

சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடலும் இப்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அமேசான் தளத்தில் இப்போதைக்கு இந்த வேரியண்ட் மாடல் மட்டும் ஸ்டாக் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் உடன் இந்த போனை வாங்க விரும்பினால் நீங்கள் இந்த ஸ்டோரேஜ் மாடலை தேர்வு செய்யலாம்.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.6" இன்ச் FHD+ கொண்ட Super AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1080 x 2340 பிக்சல் கொண்ட டிஸ்பிளேவாக வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 6GB மற்றும் 8GB ரேம் விருப்பத்துடன் வருகிறது. இந்த சாதனம் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக நிறுவனம் இத்துடன் 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. ஆம், மைக்ரோ SD கார்டு மூலம் ஸ்டோரேஜ் விரிவாக்கும் அம்சத்தை இது கொண்டுள்ளது. இந்த சாதனம் 48MP(OIS) + 8MP + 5MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது.

இது முன்பக்கத்தில் 13MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரியை வழங்குகிறது. இது சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. குறைந்த விலையில் ஒரு பெஸ்டான 5ஜி போனை வாங்க விரும்பினால் இந்த போனை தயக்கமின்றி நீங்கள் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 5G Gets Sudden Price Drop Check New Price in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X