Home
News

அப்படி போடு.. ஒரேடியா பிரைஸ் கட்.. மடமடவென விலை குறைந்த Samsung 5G போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது சலுகை மற்றும் உடனே தள்ளுபடி ஆகிவை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G): சாம்சங் நிறுவனம் இந்தியாவில் மிட்ரேஞ் செக்மென்ட்டில் அறிமுகம் செய்த சாதனம் தான் இந்த சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போன். இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போனின் மீது கேஷ்பேக் சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் வரிசையில், சமீபத்திய சாதனமாக பிரைஸ் கட் பெரும் போனாக இது திகழ்கிறது.

அப்படி போடு.. ஒரேடியா பிரைஸ் கட்.. மடமடவென விலை குறைந்த Samsung 5G..

அதிரடி விலை குறைப்பு: சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ரூ. 3000 மதிப்பிலான உடனடி தள்ளுபடியை பெறுகிறது. இதன் விளைவாக, ரூ.27,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் விலை இப்போது ரூ.24,499 ஆக குறைந்துள்ளது. இதேபோல், 8ஜிபி + 256ஜிபி விலை ரூ.26,499 ஆக குறைந்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தள்ளுபடி: சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தின் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ.22,999 ஆக மாறியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட விலையானது சாம்சங் இந்தியா இணையதளம், அமேசான் (Amazon) இந்தியா மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகியவற்றில் இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A34 5ஜி ரெடி: கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, முதலில் இது ரூ.30,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் லைட் க்ரீன் (Light Green), பிளாக் (Black), Light Violet (லைட் வயலட்) மற்றும் Silver (சில்வர்)நிறங்களில் இப்போது வாங்க கிடைக்கிறது.

அப்படி போடு.. ஒரேடியா பிரைஸ் கட்.. மடமடவென விலை குறைந்த Samsung 5G..

சாம்சங் கேலக்ஸி A35 5ஜி சிறப்பம்சம் (Samsung Galaxy A35 5G Specifications): ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் நெருங்கி வருவதை தொடர்ந்து இந்த பிரைஸ் கட் அறிவிக்கப்பட்டதாக கூறப்டுகிறது. சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இது FHD+ தெளிவுத்திறனுடன் 6.6" இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது.

கேமரா: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் பாதுகாப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் வரை 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது OIS ஆதரவுடன் 48MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பேட்டரி: முன்பக்கத்தில் இது 13MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இந்த போனில் ஆப்ஜெக்ட் எரேசர், இமேஜ் ரீமாஸ்டர் மற்றும் இமேஜ் கிளிப்பர் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி A34 5ஜி (Samsung Galaxy A34 5G) சாதனம் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் வாங்க தரமான சாதனம் இது,

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 5G Gets Cashback and Price Cut In Amazon Flipkart India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X