Home
News

எது! 30,000mah பேட்டரி உடன் ஒரு Samsung Galaxy A32 போனா? யானைக்கு தீனி போட்ட கதையா?

Samsung Galaxy A32 ஸ்மார்ட்போன் 30,000mah பேட்டரி உடன் இணையத்தில் காணப்பட்டுள்ளது. எது ஒரு ஸ்மார்ட்போனிற்கு 30,000mah பேட்டரியா? இது உண்மையா? என்று நீங்கள் ஷாக் ஆகி இருக்கலாம். இது உண்மை தான் மக்களே.! எப்படி இது சாத்தியம் என்று பார்க்கலாமா?

சாம்சங் கேலக்ஸி ஏ32 (Samsung Galaxy A32) ஸ்மார்ட்போன் மேம்பட்ட 200MP கேமரா அமைப்பு உடன், 300W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பலவற்றின் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக முன்னேறியுள்ளன. இருப்பினும், ஸ்மார்ட்போன் பேட்டரிகளின் திறன் மாறாமல் உள்ளது. இது ஸ்மார்ட்போனின் இன்றியமையாத அங்கமாகும்.

எது! 30,000mah பேட்டரி உடன் ஒரு Samsung Galaxy A32 போனா?

எது! 30,000mah பேட்டரி உடன் ஒரு Samsung Galaxy A32 போனா?

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் சாதனத்தின் செயல்திறன், ஆயுள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் பல நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. ஆனாலும், இன்னும் பேட்டரி அளவு நமக்கு பற்றாமல் இருக்கிறது. அடிக்கடி சார்ஜரை தேட வேண்டியதுள்ளது. இதற்கு தீர்வாக ஒரு Reddit பயனர் Samsung Galaxy A32 போனிற்கு 30,000mah பேட்டரியை உருவாக்கியுள்ளார்.

இருப்பினும், Downtown_Cranberry44 என்ற பயனர்பெயருடன் செல்லும் Reddit பயனர், Samsung Galaxy A32 ஸ்மார்ட்போனின் அசல் பேட்டரியை மாற்றியுள்ளார். இதன் அசல் பேட்டரி அளவு வெறும் 5,000mAh அளவு தான் என்றாலும் கூட, அதன் பேட்டரி திறனை 30,000mAh ஆக உயர்த்தியுள்ளார். எப்படி இவர் ஒரு சாதனத்தின் கொள்ளளவை தாண்டி, ஒரு கெப்பாசிட்டியை உருவாக்கினார் என்று பார்க்கலாம்.

இந்த மாற்றமானது, 5000mAh திறன் கொண்ட ஆறு இணை-வயர்டு சாம்சங் 50E செல்களைக் கொண்ட வெளிப்புற பேக்கிற்கு உள் பேட்டரியை மாற்றுவதை உள்ளடக்குகிறது. இதை இவர் தனியாக வடிவமைத்து உருவாக்கி இருக்கிறார்.Samsung Galaxy A32 சாதனத்தின் அசல் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது. வெளிப்புற பேட்டரி பேக் கனமானது மற்றும் 450 கிராமுக்கு மேல் எடை கொண்டது.

எது! 30,000mah பேட்டரி உடன் ஒரு Samsung Galaxy A32 போனா?

30,000mah பேட்டரியை எப்படி Samsung Galaxy A32 போனுடன் இணைத்தார்கள்!

இதில் இரண்டு USB-A, ஒரு USB-C, மைக்ரோ USB மற்றும் லைட்னிங் போர்ட்கள் உட்பட பல சார்ஜிங் கனெக்டர்களும் மாற்றியமைக்கப்பட்ட போனில் சேர்க்கப்பட்டுள்ளன. Reddit பயனரின் கூற்றுப்படி, 30,000mAh பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த பேட்டரி கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை நீடிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இருப்பினும், ஆரம்பத்தில், இந்த பேட்டரி அதிக பயன்பாட்டுடன் இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்ததாக அவர் தெரிவித்தார். இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட ஃபோன் கூடுதல் பேட்டரி பேக்கை இன்னும் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை போனுடன் இணைத்த போதிலும், சாதனம் வெறும் 1 சதவீத பேட்டரி அளவை மட்டுமே தொடர்ந்து காண்பிக்கிறது. ஆனாலும், 1 வாரம் வரை நீடித்து நிலைக்கிறது.

உண்மையில், Samsung Galaxy A32 ஆனது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் பயன்முறையில் ஸ்மார்ட்போனை இயக்குகிறது. இணைய உலாவல் போன்றவற்றை உள்ளடக்கிய மிதமான பயன்பாட்டில் இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது போனின் அசல் பேட்டரி உடன் கணக்கிடப்பட பேட்டரி ஆயுள் ஆகும்.

மறுபுறம், தனிப்பயனாக்கப்பட்ட Samsung Galaxy A32 5G போனின் பேட்டரி இதை விட இரட்டிப்பு பயன்பாட்டை வழங்கியுள்ளது. இது கேட்பதற்குக் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், கையில் பிடித்து பயன்படுத்த போதுமான எடையில் இல்லை என்பது ஒரு குறைபாடாக இருக்கிறது. சில பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை நீட்டிக்க என்னவெல்லாம் செய்ய முயல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 Modified has a whopping 30000mAh battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X