விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!

|

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ரஷ்யாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வரும் முதல் ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுவாகும். சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி சாதனம் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி செயலி மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது.

தேதி உறுதிப்படுத்தவில்லை

தேதி உறுதிப்படுத்தவில்லை

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதன் 4ஜி மாடல் முன்னதாகவே ரஷ்யாவில் அறிமுகமாகியுள்ளது.

4ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

4ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

4ஜிபி ரேம் 64ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.19600 எனவும் 4ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.21600 எனவும் இருக்கிறது. இந்த சாதனம் ரஷ்யாவில் ஆவ்சம் பிளாக், ஆவ்சம் ப்ளூ, ஆவ்சம் வயலெட் மற்றும் ஆவ்சம் வெள்ள வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் ரஷ்யாவின் ஆன்லைன் தளங்களிலும், சாம்சங் பிராண்டட் தளங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இதே விலை வரம்பை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது இதன் விலை மற்றும் விவரங்கள் தெரியவரும். சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, இன்பினிட்டி யு நாட்ச் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது.

ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலி

ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலி

4ஜிபி ரேம், மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1டிபி வரை விரிவாக்கலாம். இது 64 ஜிபி உள்சேமிப்பு, 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்களில் வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா உள்ளது. அதோடு 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 4G Launching Soon in India With 64Mp Primary Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X