சாம்சங் கேலக்ஸி ஏ 31 மீது ரூ. 1,000 விலைக் குறைப்பு.. புதிய விலை இது தான்..
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன் ரூ. 1,000 விலைக் குறைப்பை பெற்றுள்ளது. அதன் வாரிசான சாம்சங் கேலக்ஸி ஏ 32 அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே இந்த புதிய விலை குறைப்பை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தென் கொரிய நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ 32 இல் எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அல்லது ஜெஸ்ட்மனி வழியாகப் பெறக்கூடிய கேஷ்பேக் சலுகைக்கு கூடுதலாக எக்ஸ்சேன்ஜ் சலுகையைப் பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போனின் விலை தள்ளுபடி மற்றும் சலுகைகளுக்கு முன் 21,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ 31 போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 16,999 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முன்பு ரூ. 17,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய விலையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி ஏ 31 விரைவில் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சாம்சங் இந்தியா தளம் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும்.
முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) மூலமாகவும் இது கட்டணமில்லாத ஈ.எம்.ஐ விருப்பங்களைப் பெறவும் நிறுவனம் இப்போது அனுமதிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி மற்றும் சலுகையுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 க்காக தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாறிக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பழைய கைபேசியின் மதிப்பை விட ரூ. 3,000 கூடுதலாகக் கிடைக்கும்.
My Galaxy app பயன்பாட்டிலிருந்து Samsung Upgrade > Check Device Exchange Value என்பதை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் கிடைக்கும் சரியான மதிப்பைப் பார்க்க முடியும். இந்த தள்ளுபடி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் இப்போது கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 வாங்கும் வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ரூ. 2,000 பெற முடியும். அதேபோல், ZestMoney வழியாக நடத்தப்படும் பரிவர்த்தனைகளிலும் ரூ. 1,500 தள்ளுபடியைப் பயனர்கள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications