சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆஃப்லைன் தளங்களில் தற்சமயம் கேலக்ஸ் ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடலுகக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் ரூ.16,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்போது அறிவித்த விலைகுறைப்பின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இதனுடன் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே வசதி
கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1,560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிளை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா வசதி
கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 25எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி வசதி
கேலக்ஸி ஏ30எஸ் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,வைஃபை,ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications