Samsung செய்யப்போகும் சம்பவம்.. பட்ஜெட் விலையில் 3 கேமரா.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5G போன்.. என்ன விலை?
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த 5ஜி போனாக விரைவில் அறிமுகமாகவிருக்கும், சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) சாதனத்தை பற்றிய தகவல்கள் அறிமுகத்திற்கு முன்பாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த போனில் என்னவெல்லாம் சிறப்பாக இருக்கிறதென்று பார்க்கலாம்.
இந்த சாதனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு சான்றிதழ் தளங்களில் காணப்பட்டது. இது அதன் முக்கிய விவரக்குறிப்புகளில் சிலவற்றை பரிந்துரைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ24 (Samsung Galaxy A24) மாடலின் வாரிசாக வெளிவரவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) வருகிற 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனைப் பற்றிய பல லீக் தகவல்கள் மற்றும் அறிக்கைகள் வடிவமைப்பு ரெண்டர்கள் உட்பட அதன் சில விவரங்களை புதிய லீக் தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது, ஒரு புதிய கசிவு மீண்டும் சில முக்கிய விவரக்குறிப்புகளை பரிந்துரைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G):
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் விலை வரம்பு பற்றிய சில தகவல்களும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. அபுல்ஸ் (Appuals) அறிக்கையின் தகவல்படி, சாம்சங் கேலக்ஸி A25 சாதனம் 6GB ரேம் + 128GB மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட் மாடல்களில் வரும் என்று டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் (@Sudhanshu1414) கூறியுள்ளார்.
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) விலை:
இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை EUR 300 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தோராயமாக ரூ. 26,800 முதல் ரூ. 35,700 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ப்ளூ, வைட் மற்றும் மஞ்சள் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G Specifications) சிறப்பம்சம்:
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஆனது 6.5' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI OS இல் இயங்கும் என்று அறிக்கை கூறுகிறது. இது மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) உடன் இணைக்கப்பட்ட இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வரலாம். அதில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி A25 ஆனது USB Type-C போர்ட் வழியாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. இதன் அளவு 162mm x 77.5mm x 8.3mm என்று மற்றொரு அறிக்கை சுட்டிக்காட்டியது. இதற்கிடையில், தொஇந்த போனின் ரெண்டர்கள் குறுகிய பெசல்கள் மற்றும் முன்பக்க கேமராவை வைத்திருக்க முன் பேனலின் மேற்புறத்தில் மையமாக சீரமைக்கப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றை காண்பித்துள்ளது.
இந்த போனின் வலது விளிம்பில் பவர் பட்டனும், கைரேகை சென்சாரும் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் ராக்கர்களும் வலது பக்கம் வைக்கப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ25 இன் டிரிபிள் கேமரா யூனிட் பின் பேனலின் மேல் இடது மூலையில் செங்குத்தாக அமைக்கப்பட்டு அதன் அருகில் LED ஃபிளாஷ் யூனிட் வைக்கப்பட்டுள்ளது. இது 2024ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications