Samsung Galaxy A22 5G இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா? உடனே வாங்கலாம் போலயே.!
சாம்சங் நிறுவனம் புதிய 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலாக அதன் சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி (Samsung Galaxy A22 5G) சாதனத்தை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது மற்றும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது முன்பக்க செல்பி கேமராவிற்கு வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்சைப் பயன்படுத்துகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜியின் பிற முக்கிய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் இது 5 ஜி நெட்வொர்க்கு ஆதரவுடன் வருகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி விலை, மற்றும் விற்பனை விவரங்கள்
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி சாதனத்தின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 21,999 விலையில் கிரே, மின்ட் மற்றும் வயலட் வண்ணங்களில் வருகிறது. இன்று தொடங்கி பல்வேறு சில்லறைக் கடைகள் மூலம் நாட்டில் வாங்குவதற்கு இது கிடைக்கும். மேலும், Samsung.com மற்றும் முன்னணி ஆன்லைன் வழிகளில் இன்று நள்ளிரவு முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போன்
ஆரம்பக்கால சலுகையாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி அட்டை தாரர்களுக்கு ரூ. 1,500 மதிப்பிலான கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. இத்துடன், பல்வேறு வங்கி மற்றும் என்.பி.எஃப்.சி கூட்டாளர்கள் வழியாக ஈ.எம்.ஐ விருப்பங்களை நிறுவனம் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி சிறப்பம்சம்
சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஆண்ட்ராய்டு 11 இல் ஒன் யுஐ கோர் 3.1 உடன் இயங்குகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இதர இணைப்பு அம்சங்கள்
செல்ஃபிகள் மற்றும் வீடியோ சாட்காக, இதில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 TB வரை ஆதரிக்கிறது. இது 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் 15W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி சாதனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications