Samsung Galaxy A21s மீது மீண்டும் விலை குறைப்பு.. புதிய விலை இன்னும் மலிவு..
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மாரட்போன் மீது மீண்டும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஸ்மார்ட்போன் விலை குறைப்பைப் பெற்ற பிறகு, இப்போது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ.13,999-விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் தற்போதைய விலை ரூ.14,999 என்று விலை குறைப்பிற்குப் பின்னர் மாறியுள்ளது. ஆனால் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை, இது வழக்கம் போல் ரூ.17,499 என்ற பழைய விலையிலேயே வாங்கக் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சம்
- 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே
- 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/ 128ஜிபி ஸ்டோரேஜ்
- 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 48எம்பி பிரைமரி சென்சார்
- 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 2எம்பி மேக்ரோ கேமரா
- 2எம்பி டெப்த் சென்சார்
- 13எம்பி செல்பீ கேமரா
- எல்இடி பிளாஷ்
- 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications