மார்க்கெட் மிரளுது.. 6 வருஷம் தடையில்லாமல் உழைக்கும் புது Samsung போன்..இனி அடிக்கடி Mobile மாற்ற வேண்டாம்..
சாம்சங் (Samsung) நிறுவனம்னா சும்மாவா? உலக ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் நிறுவனமாக அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள சாம்சங் நிறுவனம் இப்போது, உலக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு (Android smartphone users) ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. இதுவரை எந்தவொரு மொபைல் தயாரிப்பு நிறுவனமும் அறிவிக்காத புதிய அறிவிப்பை சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி A16 (Samsung Galaxy A16) தொடர் 6 வருடங்களுக்கு தடையில்லாத சாப்ட்வேர் அப்டேட் (Software update) மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை பெறுமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி A16 (Samsung Galaxy A16) சீரிஸ் பற்றிய லீக் தகவல்கள் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் 5G மற்றும் 4G மாடல்கள் இடம்பெறும் என்றும், இதன் டிசைன் மற்றும் நிறங்கள் குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த போனின் சரியான அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அக்டோபரில் இது அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A16 5ஜி மற்றும் 4ஜி (Samsung Galaxy A16 5G and 4G):
இந்த சமீபத்திய லீக் தகவல்கள் மூலம் சாம்சங் கேலக்ஸி A16 5G மற்றும் சாம்சங் கேலக்ஸி A16 4G மாடல்களின் சில முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இரண்டும் பின்புறத்தில் டிரிபிள்- கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கத்தில் செல்ஃபி கேமராவிற்கான யூ-வடிவ நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் 5G மாறுபாடு அதன் பளபளப்பான பின்பக்க பேனலுடன் வேறுபடுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தின் 5ஜி வேரியண்ட் ப்ளூ பிளாக் (Blue Black), லைட் கிரீன் (Light Green) மற்றும் கிரே (Grey) ஆகிய நிறங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 4G வேரியண்ட் மாடல் மேட் பினிஷுடன் அதே நிறங்களை பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் பேனல் நிறம் மற்றும் மெட்டீரியல் வேறுபாட்டை கொண்டிருக்கும் பெரியளவில் மாறுபாட்டை நம்மால் வெறும் கண்களால் உணரமுடியாது.
சாம்சங் கேலக்ஸி A16 சிறப்பம்சம் (Samsung Galaxy A16 Specifications):
சாம்சங் கேலக்ஸி A16 தொடர் சாதனம் 6.7'' இன்ச் பெரிய டிஸ்பிளேவுடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1080 x 2340 பிக்சல் குவாலிட்டியை கொண்டுள்ளது. இந்த சாதனம் இந்தியா மற்றும் தாய்லாந்தில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 SoC சிப்செட்டுடன் வரும். அல்லது சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 1330 சிப்செட்டை கொண்டிருக்கலாம்.
இது 4GB முதல் 8GB வரையிலான RAM உடன் 128GB முதல் 256GB வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5,000mAh திறன் கொண்ட வலுவான பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தினசரி செயல்பாடுகளுக்கு போதுமான சக்தியை வழங்கும். இது IP54 மதிப்பீட்டையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A16 5G போனுக்கு ஒரு முக்கிய அம்சம் அதன் மென்பொருள் ஆதரவாக இருக்கலாம். சாம்சங் முன்னெப்போதும் இல்லாத ஆறு வருட முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களை இந்த போனுடன் வழங்கவுள்ளது. இதில் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களையும் சாம்சங் வழங்குமென்று தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் இனி நீண்ட காலம் வரை கிடைக்கப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
மார்க்கெட் மிரளுது.. 6 வருஷம் தடையில்லாமல் உழைக்கும் புது Samsung போன்:
5G மாடல் குறித்து அதிகத் தகவல்கள் கிடைக்கின்ற நிலையில், கேலக்ஸி A16 4G குறித்த விவரங்கள் இன்னும் வெளிவருகின்றன. கசிவுகளின் அடிப்படையில், இது அதன் 5G எதிரொலிக்கு ஒத்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது, ஆனால் வண்ணத்தில் சிறிதளவு மாறுபாடுகள் உள்ளன. அதன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றிய விரிவான புரிதலுக்காக, சாத்தியமான வாங்குபவர்கள் மேலும் கசிவுகள் அல்லது சாம்சங்கிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
சுருக்கமாக, வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி A16 தொடர் பாணி, செயல்திறன் மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆதரவின் கலவையை வழங்கும் என்று உறுதியளிக்கிறது, இது பட்ஜெட் விழிப்புணர்வுடைய நுகர்வோருக்கு ஒரு ஈர்க்கக்கூடிய விருப்பமாகும். அது வெளியாகும் நேரம் நெருங்கிவிட்ட நிலையில், தொழில்நுட்ப சமூகம் சாம்சங்கிடமிருந்து இந்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications








