அதிக காசுக்கு புதுசா 5G போன் வாங்காதீங்க.. 1TB ஸ்டோரேஜ்.. 3 கேமரா.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து, அடுத்தபடியாக பட்ஜெட் விலையில் அறிமுகமாகவிருக்கும் சாதனம் தான் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் மாடலாகும். இது ரூ.15,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனமான சாம்சங்கிடம் இருந்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வமாக தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு புதிய லீக் தகவல் இந்த போனின் சாத்தியமான வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.

விரைவில் வெளி வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) சாதனம் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் வரிசையில் வெளிவரும். இது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் முன்புறத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று ரெண்டர்கள் தெரிவிக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ15(Samsung Galaxy A15):
இது மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட் (MediaTek Dimensity 6100+ SoC) இல் இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்யும். சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஆனது 25W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான டிப்ஸ்டர் தகவலின் படி, ரெண்டர்கள் டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச், செல்ஃபி கேமராவைக் காட்டுகின்றன. அங்கீகாரத்திற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த போனில் கேமரா பம்ப் இருப்பதாகத் தெரியவில்லை. இது சிறிய LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது.
Samsung Galaxy A15 5G சிறப்பம்சம் (Samsung Galaxy A15 5G Specification):
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஆனது 6.5' இன்ச் கொண்ட முழு-HD+ உடைய 2,400 x 1,080 பிக்சல்கள் திறன் கொண்ட டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் இடம்பெறும். முன்பே சொன்னது போல இது மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ (MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் உடன் மாலி G57 GPU உடன் இணைந்து இயங்கும்.
இந்த போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட் அடங்கும் என்று கூறப்படுகிறது. இதன் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் வரக்கூடும். சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஆனது 128GB சேமிப்பகத்தை வழங்குகிறது.
இது மைக்ரோ SD கார்டு மூலம் 1TB வரை விரிவாக்கக்கூடியது. இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்ய முடியும். அங்கீகாரத்திற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் தொலைபேசி வர வாய்ப்புள்ளது. சாம்சங் (Samsung) இன் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி,தொடக்க விலை ரூ. 16,500 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








