Home
News

Samsung சைலெண்டாக சம்பவம்.. கம்மி விலையில் புது 5G வேரியண்ட் போன்.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் (Samsung) நிறுவனம் சத்தமில்லாமல் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வேரியண்ட்டை ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை பேக் செய்து வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) மாடலில் இது சேர்ந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) வரிசையில் 2 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. இதில் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் என்று இரண்டு விருப்பங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது.

Samsung சைலெண்டாக சம்பவம்.. கம்மி விலையில் புது 5G வேரியண்ட் போன்..

சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G): இப்போது, சாம்சங் நிறுவனம் இந்த சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) வரிசையில் புதிய சேர்ப்பாக மற்றொரு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை சத்தமில்லாமல் அறிமுகம் செய்து, விற்பனைக்கும் கொண்டுவந்துள்ளது. புதிய ஸ்டோரேஜ் விருப்பமாக சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது.

ரூ. 17,999 விலையில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலை பற்றிய சரியான விபரங்கள் இன்னும் இணையத்தில் லீக் அகவில்லை. இருப்பினும் இதன் விலை ரூ.15,000 முதல் ரூ.16,000 விலை புள்ளிகளுக்கு இடையே பொருந்தும் என்று நம்பப்படுகிறது. மலிவு விலை மற்றும் நிலையான செயல்பாட்டுடன் 5ஜி ஸ்மார்ட்போனை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

இது தற்போது பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் ஆஃப்லைனில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாவது, சாம்சங்கின் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும் என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. விரைவில் இதன் கிடைக்கும் தன்மை, ஆன்லைன் தளங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக தி டெக் அவுட்லுக் (TheTechOutlook) தெரிவித்துள்ளது.

Samsung சைலெண்டாக சம்பவம்.. கம்மி விலையில் புது 5G வேரியண்ட் போன்..

சாம்சங் கேலக்ஸி A15 5G சிறப்பம்சம் (Samsung Galaxy A15 5G Specifications):
சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.5: இன்ச் அளவு கொண்ட FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. இது மிகவும் மெருதுவான டச் மற்றும் கிரிஸ்டல் கிளியர் வீடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ பிரசசர் (MediaTek Dimensity 6100 Plus SoC) உடன் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் ஒன் UI 6.0 (One UI 6.0) இயங்குதளத்தில் இயங்குகிறது.

கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில், இது 50MP மெயின் கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) சாதனம் 13MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இது 25W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. பட்ஜெட் விலையில்ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்பினால், நீங்கள் தாராளமாக இந்த சாம்சங் கேலக்ஸி A15 5G (Samsung Galaxy A15 5G) சாதனத்தை தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A15 new variant offers 6GB of RAM and 128GB of storage in offline stores
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X